பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்24

     பறவைகளெல்லாம் எரோதனைப் போற்றுவது, தன் புலால் நாறும்
வேலால் அவன் பகைவரைக் கொன்று தமக்கு விருந்திடுதல் கருதியாம்.



                 5
புல்வினையு ளைந்தழவு தித்தருள்பு ரிந்து
நல்வினைத ளிர்ப்பநலம் யார்க்குமிடு நல்லோய்
கொல்வினையு ணர்ந்துனுயிர் கோறறன தாண்மைக்
கொல்வினையெ னக்கருது மிவ்வுலகி லுண்டோ?
 
"புல் வினை உளைந்து அழ உதித்து, அருள் புரிந்து,
நல் வினை தளிர்ப்ப நலம் யார்க்கும் இடு நல்லோய்,
கொல் வினை உணர்ந்து, உன் உயிர் கோறல் தனது                                  ஆண்மைக்கு
ஒல் வினை எனக் கருதும் இவ்வுலகில் உண்டோ?

     "தீவினைகள் வருந்தி அழுமாறு இவ்வுலகில் பிறந்து, அருளே
புரிந்து, நல்வினை தழைக்க யாவர்க்கும் நலமே தரும் நல்லவனே,
கொலைத் தொழிலைச் செய்ய நினைந்து, உன் உயிரைக் கொல்லுதலும்
தனது ஆண்மைக்கு இயலும் செயலே எனக் கருதும் ஒருவன்
இவ்வுலகில் உண்டோ?

     'தனது' என்ற சொல்லின் ஆற்றலால், 'ஒருவன்' என்ற எழுவாய்
வருவித்து உரைக்கப்பட்டது.

                  6
தொல்லையுள நம்வினைது டைத்துநமை வீட்டில்
வல்லையுள வன்பொடுபு குப்பமனு வந்தோ
யொல்லையுள நந்துயரொ ழித்திடநி னக்கே
யெல்லையுள தொன்றுமில வேண்டுமிடர் கொல்லோ.
 
"தொல்லை உள நம் வினை துடைத்து, நமை வீட்டில்
வல்லை உள அன்பொடு புகுப்ப மனு வந்தோய்,
ஒல்லை உள நம் துயர் ஒழித்திட, நினக்கே
எல்லை உளது ஒன்றும் இல வேண்டும் இடர் கொல்லோ?

     "பழமையாய்த் தொடர்ந்து வரும் எம் பாவ வினையைத் துடைத்து,
வல்லமையுள்ள அன்போடு எம்மை வான் வீட்டில் புகவிடும் பொருட்டு
மனிதனாக அவதரித்து வந்தவனே, கொண்டுள்ள எம் துயர்களை
விரைவில் ஒழிக்கும் பொருட்டு, அளவாய்ச் சொல்வதற்கு உள்ளதென
ஒன்றும் இல்லாத துன்பங்கள் உனக்கும் வேண்டுமோ?