பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 12

          18
நாறிய மணியின் வாய்ந்த
      நன்முடி பெயர்தற் கஞ்சி
யூறிய கொடிய வஞ்சத்
      துணர்வினை யொளித்துக் தானே
கூறிய வுரைகள் கோட்டிக்
      குணித்தவை முடித்தற் கொல்கா
தேறிய வுதவி தேடுந்
      திறத்தென விளம்பல் செய்தான்.
 
நாறிய மணியின் வாய்ந்த நன்முடி பெயர்தற்கு அஞ்சி
ஊறிய கொடிய வஞ்சத்து உணர்வினை ஒளித்து, தானே
கூறிய உரைகள் கோட்டிக் குணித்தவை முடித்தற்கு ஒல்கா
தேறிய உதவி தேடும் திறத்தென விளம்பல் செய்தான் :

      விளங்கிய மணிகளால் அமைந்த நல்ல முடி, தன்னை விட்டு
நீங்குவதைப் பற்றி அஞ்சினான். தன் மனத்தில் ஊறிக்கொண்டிருந்த
கொடிய வஞ்சக உணர்வை மறைத்தான். தானே கூறிய உரைகளைத்
திரித்தும் நினைத்தவற்றை முடிப்பதற்குத் தளராதவனாய், தன்னையே
தேற்றிக்கொள்ள அவர்களின் உதவியைத் தேடும் முறையில், இவற்றைச்
சொல்லத் தொடங்கினான் :

      ஒல்கா - ஒல்காது என்ற என்ற எதிர்மறை வினையெச்சம் ஈறு
கெட்டது. தேறிய - 'தேற' என்ற பொருள்படும் 'செய்யிய' என்னும்
வாய்பாட்டு வினையெச்சம்.

                      நாபன் நயப்புரை  

      - மா, கூவிளம், கூவிளம், தேமா

 
                19
பற்றார் வெம்பகை பட்டற நானாள்
கற்றார் கல்விக டந்தெழு நாட்டின்
மற்றா ரோவொரு மன்னனு தித்தீங்
குற்றானென்றதொ ருங்குல கெல்லாம்.
 
"பற்றார் வெம்பகை பட்டு அற நான் ஆள்
கற்றார் கல்வி கடந்து எழு நாட்டில்
மற்று ஆரோ ஒரு மன்னன் உதித்து ஈங்கு
உற்றான் என்றது ஒருங்கு உலகு எல்லாம்.