| 26 |
நடுவொக்
குந்தகை நாட்டர சர்க்கோர்
வடுவொக் குந்துயர் வந்தன வேலை
கமுவொக் கும்பிணி போவது காப்பா
ருடுவொக் குங்கலை யொள்ளொளி நீரார். |
| |
"நடு ஒக்கும்
தகை நாட்டு அரசர்க்கு ஓர்
வடு ஒக்கும் துயர் வந்தன வேலை
கடு ஒக்கும் பிணி போல் அது காப்பார்
உடு ஒக்கும் கலை ஒள் ஒளி நீரார். |
"விண்மீனைப்
போன்று கலைகளின் தெளிந்த ஒளி படைத்தோர்
நீதியோடு பொருந்திய பெருமை வாய்ந்த தம் நாட்டு அரசர்க்கு ஒரு
பழியை ஒத்த துன்பம் வந்தபோது நஞ்சோடு பொருந்திய நோய் போல்
எண்ணி அதனைப் போக்கிக் காக்க முற்படுவர்.
வந்தன
வேலை - 'வந்த' என்ற பெயரெச்சம், இடையே 'அன்'
சாரியை பெற்று வந்தது.
| 27 |
ஆக்கத்
தாருயிர் யாவும ளித்த
நோக்கத் தோருயிர் கொன்றிக னூற
லூக்கத் தஞ்சுவை யோவுல கெல்லாங்
காக்கக் பெய்நிறை காரிடி யாதோ. |
| |
"ஆக்கத்து ஆருயிர்
யாவும் அளித்த
நோக்கத்து ஓர் உயிர் கொன்று இகல் நூறல்
ஊக்கத்து அஞ்சுவையோ? உலகெல்லாம்
காக்கப் பெய் நிறை கார் இடியாதோ? |
"ஆக்கமே
கருதி, அருமையான உயிர்கள் யாவற்றையும் இது வரை
காத்து வந்த நோக்கத்தை எண்ணி, ஓர் உயிரைக் கொன்று பகையை
அழிக்க எழும் ஊக்கத்திற்கு அஞ்சுவாயோ? உலகமெல்லாம் காக்க மழை
பொழிகின்ற நீர் நிறைந்த கருமேகம், சில வேளைகளில் இடி இடிப்பது
இல்லையோ?
| 28 |
பாயா வேங்கையை
யென்புளி பைம்பூ
வீயாப் புண்டரி கம்மென வெண்ண
லாயாப் பேதைமை யாம்பகை கோற
லோயாக் கோல்வழு வோகட னென்றான். |
|