பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 17

"பாயா வேங்கையை என்புளி, பைம்பூ
வீயாப் புண்டரிகம் என எண்ணல்
ஆயாப் பேதைமை ஆம்; பகை கோறல்
ஓயாக் கோல் வழுவோ? கடன்!" என்றான்
.


      "பாயாத வேங்கை என்று ஒருவன் வேங்கை மரத்தைக் கருதிச்
சொல்லிய விடத்து, அதனைப் பசுமையான பூ மலராத புண்டரிகமாகிய
வேங்கைப் புலியென்று எண்ணுவது ஆராயாத அறியாமை ஆகும்;
பகைவனைக் கொல்லுதல் தளராத செங்கோல் நெறிக்குக் குற்றமாகுமா?
அது அவனுக்குக் கடமை!" என்று உரையை முடித்தான்.

     வேங்கை - மரத்திற்கும் புலிக்கும் பொதுப் பெயர் : 'பாயாத' என்ற
குறிப்பினால், புலியை ஒழித்து மரத்தைக் காட்டும். புண்டரிகம் -
தாமரைக்கும் புலிக்கும் பொதுப் பெயர் : 'பூவாத' என்ற குறிப்பினால்,
தாமரையை ஒழித்துப் புலியைக் காட்டும் : கள்வனைக் கோறல் கடுங்கோ
லன்று : வெள்வேற் கொற்றங்காண" என்ற சிலப்பதிகாரப் பாண்டியன்
கூற்றும்," (வழக்குரை : 64-65.) "கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல்
பைங்கூழ், களைகட்டதனொடு நேர்" என்ற திருவள்ளுவர் வாக்கும் (550)
இங்கு நினைக்கத்தகும். மலரின் ஒரு நிலையைச் சுட்டும் 'வீ' என்ற பெயர்
'மலர்தல்' என்ற பொருளில் வினைச் சொல்லாய் அமைதல் வழக்கில்
இல்லை. வீதல் என்ற சொல்லாட்சி அழிதல் என்ற பொருளில் வருதல்
வழக்கம்.

                      மாதியன் மருளுரை

      - மா, கூவிளம், - விளம், - விளம், - மா

 
                       29
விரும்பித் தேடிய விலைப் பொருட் கண்டென வுள்ள
மரும்பித் தேறிய வரசனாங் கவன்மிசை மலர்க்கண்
டிரும்பித் தேறலிற் காட்டிய திளை நயங் கண்டு
சுரும்கிற் றேக்கிய மற்றவ ரொத்துரை சொன்னார்.
 
விரும்பித் தேடிய விலைப் பொருள் கண்டென உள்ளம்
அரும்பித் தேறிய அரசன் ஆங்கு அவன்மிசை மலர்க் கண்
திரும்பித் தேறலின் காட்டிய திளை நயங் கண்டு கண்டு,
சுரும்பின் தேக்கிய மற்றவர் ஒத்து உரை சொன்னார்.