பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 7

      - விளம், -மா, தேமா, -விளம், -மா, தேமா

 
            11
மாலையேந் திருண்மொய்த் தெங்கு
     மல்கிய காலை கள்வர்
வேலையேந் துபுவெங் கோறல்
     விளைப்பது போலக் கோடுங்
கோலையேந் தெரோத னெஞ்சிற்
     கொடிதுணர்ந் திருண்டு மாழ்ந்த
காலையேந் தலைப்பேய் சேர்ந்து
     கடிதுணர் வழற்றிற் றன்றோ
 
மாலை ஏந்து இருள் மொய்த்து எங்கும் மல்கிய காலை கள்வர்
வேலை ஏந்துபு வெங்கோறல் விளைப்பது போல, கோடுங்
கோலை ஏந்து எரோதன் நெஞ்சிற் கொடிது உணர்ந்து இருண்டு
                                 மாழ்ந்த
காலை, ஏந்தலைப் பேய் சேர்ந்து, கடிது உணர்வு அழற்றிற்று
                                 அன்றோ

      மாலைப்பொழுது ஏந்தி வரும் இருள் எங்கும் மொய்த்துப் பெருகிய
இரவு வேளையில் கள்வர் வேலை ஏந்திச்சென்று கொடுங்கொலையை
விளைவிப்பது போல, வளைந்த கொடுங்கோலை ஏந்திய எரோதன் தன்
நெஞ்சிற் காடுமை செய்யக் கருதி மயங்கியபோது பேய் அவனைச் சேர்ந்து,
அவள் உணர்வைக் கடுமையாக கொதிப்படையச் செய்தது.

 
                    12
உருட்டிய செங்கோ லீந்தே
     யுயிருய்வ ரெவரு முண்டோ
மருட்டிய பகைமுற் றாமுன்
     வளர்திறத் தடியி லீர்ந்து
தெருட்டிய நீரார் கோன்மை
     திறம்பெறத் தாயு மேவார்
வெருட்டிய முறையில் வந்த
     வேந்தனைக் கோற னன்றே.