பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 8

"உருட்டிய செங்கோல் ஈந்தே உயிர் உய்வர் எவரும் உண்டோ?
மருட்டிய பகை முற்றா முன் வளர் திறத்து அடியில் ஈர்ந்து,
தெருட்டிய நீரார் கோன்மை திறம் பெறத் தாயும் மேவார்;
வெருட்டிய முறையில் வந்த வேந்தனைக் கோறல் நன்றே.

      ஏரோதன் உணர்வு அழலுமாறு பேய் அவன் மனத்து
உணர்த்தியதாவது: "தாம் ஆண்டு நடத்திய செங்கோலைப் பிறருக்கு ஈந்து
உயிர் பிழைத்து வாழ்வார் எவரும் உண்டோ? தெளிந்த உணர்வுடையார்
தம்மை மயங்கச் செய்த பகை முதிர்வதற்கு முன் வளரும் பருவத்தே
அடியில் அறுத் தெறிவதோடு, தம் ஆட்சி நிலைபெற வேண்டித் தாயையும்
பொருட்படுத்தார். எனவே, அச்சுறுத்திய தன்மையாய் உதித்துள்ள
இவ்வேந்தனைக் கொல்லுதல் நல்லதேயாம்.

      "இளைதாக முள்மரங் கொல்க; களையுநர் கைகொல்லும் காழ்த்த
விடத்து" என்ற குறள் (879) ஈண்டு நினைக்கத் தக்கது.

 
              13
விடுதியேல் முடியின் வாழ்க்கை
      விடுத்தனை யவற்கா ணாதேற்
சடுதியே யிடங்க டோறுந்
      ததும்பிய குழவி யெல்லா
மடுதியே லொருங்கு தானு
      மாவியற் றிறப்ப னில்லாற்
கெடுதியே யெனப்போய் கோவுங்
      கேடுற நன்றீ தென்றான்.
 
"விடுவியேல், முடியின் வாழ்க்கை விடுத்தனை. அவன் காணாதேல்,
சடுதியே இடங்கள் தோறும் ததும்பிய குழவியெல்லாம்
அடுதியே, ஒருங்கு தானும் ஆவியற்று இறப்பன். இல்லால்,
கெடுதியே" எனப்பேய், கோவும் கேடு உற, "நன்று ஈது" என்றான்.

      "அவனைக் கொல்லாது விடுவாயேல், முடிசூடி அரசாளும்
வாழ்க்கையை இழந்தவனவாய். அவனைக் காண இயலாது போனால்,
இடங்கள் தோறும் பெருகியுள்ள குழந்தைகளையெல்லாம் விரைவில்