கொல்வாய்; அப்பொழுது
அவற்றோடு தானும் ஒன்றாய் உயிர் இழந்து
மாய்வான். இல்லையேல், உறுதியாய் நீ அழிவாய்" என்று பேய் சொல்ல,
அரசனும் தனக்குக் கேடு நேருமாறு, "இது நல்லது" என்று மனம்
இசைந்தான்.
விடுத்தனை
: விடுத்தல் உறுதி என்று காட்ட இறந்த காலத்தாற்
கூறப்பட்டது. அவன் + காணாதேல் : 2ஆம் வேற்றுமைப் புணர்ச்சி.
| 14 |
இருள்சொரிந்
தடர்ந்த கங்கு
லிடைமுகி
லிருகண் கூசத்
தெருள்சொரிந் திடித்து மின்னுந்
திறத்துளத்
தாளு நாத
னருள் சொரிந் திடுமெஞ் ஞானத்
தவிர்கதிர்
மின்னி யன்னான்
மருள்சொரிந் திருண்ட நெஞ்சில்
வடுமுகங்
கூசக் கண்டான். |
| |
இருள் சொரிந்து
அடர்ந்த கங்குலிடை முகில் இரு கண் கூசத்
தெருள் சொரிந்து இடித்து மின்னும் திறத்து உளத்து ஆளும் நாதன்
அருள் சொரிந்து இடும் மெஞ்ஞானத்து அவிர் கதிர் மின்னி,
அன்னான்
மருள் சொரிந்து இருண்ட நெஞ்சில் வடு முகங் கூசிக் கண்டான். |
இருளை
அள்ளிச் சொரிந்தாற்போல் அடர்ந்த இரவில் மேகம் இரு
கண்ணும் கூசுமாறு தெளிவைச் சொரிந்து இடித்து மின்னினாற் போல,
மனிதர் உள்ளத்தில் இருந்து ஆளுங் கடவுள் அருளை சொரிந்து தரும் மெய்யறிவின் ஒளிக்கதிர்
மின்னியது. அதனால் அவன் தனது மயக்கம்
நிறைந்து இருண்ட நெஞ்சினிடையே தனது குற்றத்தைத் தன் முகமே
கூசுமாறு கண்டான்.
| 15 |
தேம்புளங்
கூசத் தோன்றுந்
திருவிளக்
கவித்து மீண்டு
சாம்புளங் கருதுந் தீமை
தன்னையே சாரா தோன்றக் |
|