பக்கம் எண் :

திருவேங்கடமாலை393

வடமொழியிலே ப்ரஹ்மாண்ட புராணத்திலும், பவிஷ்யோத்தரபுராணத்திலும் கூறப்படுதல் காண்க. அன்றி, "வேம் என்பது - அழிவின்மை, கடம் என்பது - ஐசுவரியம். அழிவில்லாத ஐசுவரியங்களைத் (தன்னையடைந்தார்க்குத்) தருதலால், வேங்கடமெனப் பெயர் கொண்டது" என்று வராகபுராணத்திற் சொல்லப்பட்டவாறும் உணர்க. இனி, தமிழ்மொழியாகவே கொண்டால், வெவ்விய காடுகளை யுடைய தெனப் பொருள்படு மென்க.

திரு என்பதற்கு - மேன்மையான என்று பொருள்கொண்டால் திரு வேங்கடம் என்ற தொடர் - பண்புத்தொகையும், மேன்மையையுடைய என்று பொருள்கொண்டால் இரண்டாம்வேற்றுமை உருபும்பயனும் உடன் தொக்க தொகையுமாம். வேங்கடமாலை என்ற தொடர் - வேங்கடத்தினது சம்பந்தமான மாலை யென்று விரித்து வேங்கடத்தின் விஷயமான பிரபந்த மென்று பொருள்கொண்டு ஆறாம்வேற்றுமைத்தொகையாகவும், வேங்கடத் தைப்பற்றிய மாலையென்று விரித்துப் பொருள்கொண்டு இரண்டாம் வேற்றுமை உருபும் பொருளும் தொக்கதொகையாகவும் உரைக்கத்தக்கது. மாலா என்ற வடமொழி, மாலையென விகாரப்பட்டது; "ஆவீறு ஐயும்." மலர்கள் கொண்டு தொடுக்கப்பட்ட பூமாலைபோலச் சொற்கள்கொண்டு தொடுக்கப்பட்ட பாமாலையாகிய பிரபந்த மென்க; எனவே, மாலையென்பது - உவமையாகு பெயராம். மாலையென்பது - பலவகைப்பிரபந்தங்களுள் ஒன்று. அதன் இலக்கணம் - ஒருவிஷயத்தைக்குறித்துப் பலசெய்யுள் கூறுவது. ஸ்ரீநிவாஸ னென்று வடமொழியிலும், அலர்மேல்மங்கையுறைமார்ப னென்பது தென்மொழியிலும் திருநாமங்கூறப்படுகின்ற திருவேங்கடமுடையானது திருவடிகளிலே சூட்டும் திருமாலை போலுதலால். திருவேங்கடமாலை எனப்பட்டது; "அடிசூட்டலாகு மந்தாமம்," "செய்யசுடராழியானடிக்கே சூட்டினேன் சொன்மாலை", "கற்றினம்மேய்த்த கழலிணைக்கீ, "ற்ற திருமாலை பாடுஞ் சீர்" என்றார் பெரியாரும். இங்கு வேங்கடமென்பது - அத்திருப்பதியில் எழுந்தருளியிருக்கிற எம்பெருமானையுங் குறிக்கும்; உபலக்ஷணம். "தேச்யரான பெருமாளைச் சொன்னதெல்லாம் உபஸர்ஜநகோடியிலே யாய் அத்தேசமே யாய்த்து இத்திருமாலைக்கு விஷயம்ழு.

ஆசிரியர் தொல்காப்பியனார் செய்யுளியலில் "விருந்தேதானும் புதுவது கிளந்த யாப்பின்மேற்றே" என்பதனால், "விருந்துதானும், பழங்கதைமேல தன்றிப் புதிதாகத் தாம் வேண்டியவாற்றால் தொடுக்கப்படும் தொடர்நிலை மேலது" என்றுகூறினமையின், இம்மாலை அங்ஙனம் கூறிய விருந்தாமென்று உணர்க. இனி, இதனைச் சிறுகாப்பியத்துள் அடக்குவர் பிற்காலத்தார்.

நூலின் புறமாக முதலிற் கூறப்பட்ட காப்புச்செய்யுள் இரண்டும், அவையடக்கச் செய்யுள் ஒன்றும், நூலின் இறுதியிற் கூறப்பட்ட "ஆதிதிரு வேங்கடமென் றாயிரம்பேரா னிடமென், றோதிய வெண்பா வொருநூறுங் கோதில், குணவாளபட்ட ரிருகோகனகத்தாள் சேர், மணவாள தாசன் றன் வாக்கு" என்ற சிறப்புப்பாயிரச்செய்யுளொன்றும் நீங்கலாக நூறு செய்யுளுடையது, இந்நூல். வெண்பாவினால் அமைந்தது. இந்நூற்செய்யுள்