தமிழ்வேதத்துக்கும், தமிழ்வேதபாராயணனுக்கும் அடைமொழியாகத் தக்கது. இந்த அடைமொழியினால், இந்நூலாசிரியர்க்குத் திவ்வியப்பிரபந் தங்களினிடத்திலும் ஆழ்வாரிடத்திலு முள்ள அன்பு விளங்கும். திருமாலடியார்களிற் சிறந்த ஆழ்வார்கள் பன்னிருவருள் ஐந்தாமவராகிய நம்மாழ்வார், மற்றையாழ்வார்கள்போல லௌகிகவிஷயஞானம் நடை யாடுகையில் எம்பெருமானருளால் ஒருகாலவிசேஷத்தில் தத்துவஞானாதிகள் தோன்றப்பெற்று அந்தப்பகவானை அனுபவிப்ப தன்றி, திருத்துழாய் பரிமளத்துடனே அங்குரிப்பது போல இயற்கையிலேயே விலக்ஷணமான ஞானபக்திகளையுடைய ராதலால், மிகுந்த ஏற்றமுள்ளவராய்த் தத்துவ ஞானப்பிரவர்த்தநத்தில் பிரதம ஆசாரிய ராகக் கொள்ளப்படுவர். இவரைப் பகவானுடைய அம்சமென்று பாத்மபுராணம் கூறுகின்றதனால், "நாராயணா" என்று எம்பெருமான்திருநாமத்தினால் விளித்தார். இவர்க்கு் இருப்பிடமான திருப்புளியமரம், எம்பெருமானுக்குத் திருப்பள்ளிமெத்தையான ஆதிசேஷனது அம்சமென்று பிரமாண்டபுராணத்திற் கூறப்பட்டிருக்கிறது. நூற்றெட்டுத் திருமால் திருப்பதிகளுள் பாண்டிய நாட்டுத் திருப்பதி பதினெட்டில் ஒன்றும் தாமிரபர்ணிநதிதீரத்திலுள்ளதுமான திருக்குருகூ ரென்கிற திவ்வியதேசத்திலே காரியென்பவர்க்கு உடையநங்கையாரது திருவயிற்றிலே திருவவதரித்த இவர் பிறந்தபொழுதே தொடங்கி அழுதல் பால்குடித்தல் முதலிய குழந்தைச்செய்கை யொன்றையுங் கொள்ளாமலே வாட்டமின்றிப் பரிபூர்ணராயிருக்கிற ஆச்சரியத்தைத் தாய்தந்தையர்கண்டு இவரை அத்திருப்பதியிலுள்ள திருமாலின் திருக்கோயிலுள் கொண்டுபோய்விட, இவர் அங்குஇருந்த ஒரு புளியமரத்தின்கீழ்ச் சென்று வீற்றிருந்து பதினாறு பிராயமளவும் கண்திறவாமல் மௌனமாய் எழுந்தருளியிருந்த பின்பு, மதுரகவிகள் இவ்வாழ்வாருடைய மகிமையை அறிந்து வந்து அடைந்து அடிமைத்தொழில் செய்துவருகையில், ஆழ்வார் இருக்கு யசுர் சாமம் அதர்வணம் என்ற நான்கு வேதங்களின் சாரார்த்தங்கள் முறையே அமையத் திருவிருத்தம் திருவாசிரியம் திருவாய்மொழி பெரியதிருவந் தாதி என்ற நான்கு பிரபந்தங்களை அருளிச்செய்து உலகத்தை உய்வித்தன ரென்ற வரலாறு அறிக; அத்தன்மைபற்றி, "தமிழ்வேதபாராயணா" என்று விளித்தார். பாராயணம் - நியமத்தோடு ஓதுதல். ஸம்ஸ்கிருத வேதங்கள் போலவே தமிழ்வேதங்களும் எவராலும் இயற்றப்படாமல் நித்தியமாயுள்ளவை யென்றும், அந்த வடமொழி வேதங்கள் ஆதிகாலத்தில் பிரமனது வாக்கினின்று வெளிப்பட்டமாத்திரத்தைக்கொண்டு "முன்னந் திசைமுகனைத் தான்படைக்க மற்றவனும், முன்னம்படைத்தனன் நான்மறைகள்" என்று அவ்வேதங்களை அவன் படைத்தா னென உபசாரமாகச் சொல்வது போலவே, ஆழ்வாருடைய திருவாய்மலரினின்று ஆதியில் இத்தென்மொழி வேதங்கள் வெளிப்பட்ட மாத்திரத்தைக்கொண்டு "வேதந் தமிழ்செய்த மாறன் சடகோபன்" என்று இவ்வேதங்களை இவர் இயற்றியதாகச் சொல்லுதல் உபசார வழக்கென்றும் சித்தாந்த மென்பது, "தமிழ்வேத |