பக்கம் எண் :

396திருவேங்கடமாலை

பாராயணா" என்ற சொல்லின் ஆற்றலால் விளங்கும். இனி, பாராயணம் என்ற வடசொல்லுக்கு - முழுவதும் என்று ஒருபொரு ளுள்ளதனால், தமிழ் வேதங்க ளெல்லாவற்றையும் வெளியிட்டவ ரென்றும் பொருள் கொள்ளலாம்; பிற்காலத்தில் அர்ச்சாவிக்கிரகரூபியாயிருந்த இவ்வாழ்வாரை நாதமுனிகள் தக்கபடி உபாசிக்க, அவர்க்கு ஆழ்வார் பிரசன்னராய்த் தமது நான்கு திவ்வியப் பிரபந்தங்களையும் மற்றுமுள்ள ஆழ்வார்கள் அருளிச் செய்த வேதப்பொருளமைந்த திவ்வியப்பிரபந்தங்க ளெல்லாவற்றையும் சொல்லியருளின ரென்கிற வரலாறு காண்க.

கர்ப்பத்தி லிருக்கும்பொழுது ஞானமுடையனவாயிருக்கின்ற குழந்தை களைப் பிறந்தவுடனே தனதுஸ்பர்சத்தால் அஜ்ஞாநத்துக்கு உள்ளாக்கி அழுதல் அரற்றுதல் முதலியன செய்யும்படி பண்ணிவிடுந் தன்மையதான சட மென்னும் வாயு, இவ்வாழ்வார் அவதரித்தபொழுது இவரையும் தொடுதற்கு வர, அப்பொழுது இவர் அதனை உங்காரத்தால் ஒறுத்து ஓட்டி யொழித்ததனால், சடகோபரென்று இவர்க்குத் திருநாமமாயிற்று. மாறன், பராங்குசன், நம்மாழ்வார் முதலிய திருநாமங்களும் இவர்க்கு உண்டு.

நாராயணன் - பாராயணன், சடகோபன் என்ற வடமொழிப் பெயர்கள், ஈறுகெட்டு ஈற்றயல் நீண்டு விளியேற்றன. பார் - இடவாகுபெயர். பார் என்பது - இங்கு மற்றையுலகங்களுக்கும் உபலக்ஷண மென்றாவது, பார் என்ற சிறப்புப்பெயர் பொதுப்பட உலகமென்ற மாத்திரமாய் நின்ற தென்றாவது கொள்க; "வேங்கடமே, வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு," "உலகுக்கெல்லாம், தேசமாய்த் திகழும் மலைத் திருவேங்கடம்" என்பவாதலின். "வெண்பாவாநூறும்" என்ற பாடத்துக்கு - வெண்பா வாகிய நூறுகவியையு மென்க. கண்பார்த்தல் - கடாக்ஷித்தருளுதல்; ஆய் - ஏவலொருமை வினைமுற்று விகுதி.                  

(1)

இதுவும் அது.

இது, திருவேங்கடமுடையானைக் குறித்தது.

மூலமே யென்றகரி முன்வந் திடர்தொலைத்து
நீலமே கம்போல நின்றானைப் - பாலாய
வேலைநடு விற்றுயிலும் வித்தகனை வேங்கடத்து
மாலையன்றிப் பாடாதென் வாய்.

(இ - ள்.) மூலமே என்ற - ஆதிமூலமே யென்று முறையிட்ட, கரிமுன் - கஜேந்திராழ்வானுடைய முன்னிலையிலே, வந்து - எழுந்தருளி, இடர் தொலைத்து - (அதற்கு முதலையினாலுண்டான) துன்பத்தை நீக்கி, நீல மேகம் போல நின்றானை - நீலநிறமுள்ள மேகம் போலக் காட்சிதந்து நின்றருளியவனும், பால் ஆய வேலை நடுவில் துயிலும் வித்தகனை - பால்மயமான கடலின் நடுவில் யோக நித்திரைகொண்டருளுகிற ஞானசொரூபியு