பக்கம் எண் :

திருவேங்கடமாலை397

மாகிய, வேங்கடத்து மாலை - திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கிற திருமாலை, அன்றி - அல்லாமல், (வேறொருகடவுளை), என் வாய் பாடாது - எனது வாயானது பாடித்துதியாது; (எ - று.)

ஆசீர்வாதம் நமஸ்காரம் வஸ்துநிர்த்தேசம் என்று வடமொழியிலும், வாழ்த்து வணக்கம் வருபொருளுரைத்தல் என்று தமிழிலுங் கூறப்படுகிற மூன்றுவகை மங்களங்களுள் வருபொருளுரைத்த லென்னும் வஸ்துநிர்த் தேசரூபமான மங்களமாகும், இச்செய்யுள். "தேவு மற்றறியேன்," "வேறொன்றும் நானறியேன்" என்றாற்போல, "மாலையன்றிப்பாடாதுஎன்வாய்" என்று தமது உறுதியான கொள்கையை வெளியிட்டார்; மறந்தும் புறந்தொழா மாந்தராதலால். பரதேவதையாகிய நாராயணனை வழிபடுதலே யன்றி க்ஷுத்ரதேவதைகளாகிய பிறதேவதைகளை வழிபடாமை ஸ்ரீவைஷ்ணவர்க்குச் சிறந்த லக்ஷணமென்க. எம்பெருமானைப்பாடுவதே யன்றித் தனிகர்களான மனிதர்களுமுட்பட மற்றெவரையும் பாடாது என்வா யென்பதும் இதன் தேர்ந்தகருத்தாகலாம். "சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவன், கேண்மினோ, என்னாவி லின்கவி யானொருவர்க்குங் கொடுக்கிலேன், தென்னா தெனா வென்று வண்டு முரல் திருவேங்கடத்து, என்னானை யென்னப்ப னெம்பெருமா னுளனாகவே" என்று ஆழ்வார் அருளிச் செய்தமை அறிக. ஒருகால் யான் பாடக்கருதினாலும் என்வாய் பாடாது; அது எம்பெருமானையே பாடப்பழகியதும் பிறரைப்பாடப்பழகாததும் ஆதலால் என்னுங் கருத்து அமைய, "பாடாது என்வாய்" என வாயின்மேல் ஏற்றிக் கூறினார்; இதனை, "பொய்ம்மைமொழி புகன்றறியேம் புகல மன மெண்ணுகினும், மெய்ம்மையலது உரையா நா வேதநவில் பயிற்சியால்" என்ற நைடதத்தோடு ஒப்பிடுக.

நின்றான், வித்தகன், மால் என்ற மூன்றும் - ஒருபொருளின்மேல் வந்த பலபெயர்கள். இவற்றில், முந்தின இரண்டையும் விசேடணமாகவும், பிந்தினதை விசேடியமாகவும் கொள்க. தனக்கு அடிமைப்பட்ட உயிர்களைப் பாதுகாத்தலில் எம்பெருமானுக்கு உள்ள மிக்க ஆதரமும், அந்த எம்பெருமான் எப்பொழுதும் இடைவிடாமல் லோகீரக்ஷணசிந்தனை செய்துகொண்டிருத்தலும், அப்பெருமான் அடியார்களுக்கு எளிதில் அருள்செய்தற்பொருட்டுத் திருவேங்கடத்தில் எழுந்தருளியிருத்தலும் தோன்றக் கூறினார்.

கஜேந்திராழ்வான் ஆதிமூலமே யென்று பொதுப்படக் கூப்பிட்ட பொழுது எம்பெருமானல்லாத பிறதேவரெல்லோரும் தாம்தாம் அச் சொல்லுக்குப் பொருளல்ல ரென்று கருதி யொழிய, அதற்கு உரிய திருமால் தானேவந்து அருள் செய்தன னென நூல்கள் கூறும். ஒரு விலங்கினாலே மற்றொரு விலங்குக்கு நேர்ந்த துன்பத்தைத் தான் இருந்தவிடத்திலிருந்தே தீர்ப்பது சர்வசக்தனான எம்பெருமானுக்கு மிகவும் எளிய தாயினும் அப்பெருமான் அங்ஙனஞ் செய்யாமல் தனதுபேரருளினால்