பக்கம் எண் :

478திருவேங்கடமாலை

88.மண்மட்டுத் தாழ்சுனையும் வட்டச் சிலாதலமும்
விண்மட்டுத் தாமரைசேர் வேங்கடமே - யெண்மட்டுப்
பாதமுன்னி னைந்தார் பரமபதஞ் சேர்கவென்று
போதமுன்னி னைந்தார் பொருப்பு.

(இ - ள்.) மண் மட்டு தாழ் சுனையும் - தரையளவும் ஆழ்ந்துள்ள சுனைகளும், விள் - மலர்ந்த, மட்டு - தேனையுடைய, தாமரை - தாமரைமலர், சேர் - பொருந்தப்பெற்ற: வட்டம் சிலாதலமும் - வட்டவடிவமான கல்லினிடமும், விண்மட்டு - மேலுலகத்தினளவும், தாம் - தாவுகிற, மரை - மான், சேர் - பொருந்தப்பெற்ற: வேங்கடமே -,- பாதம் - (தமது) திருவடியை, எள் மட்டு உன்னி - எள்ளளவேனும் தியானித்து, நைந்தார் - மனமுருகினவர்கள், பரமபதம் சேர்க - பரமபதம் அடையக்கடவர், என்று -, போதம் - தமது அறிவினால் (தமது திருவுள்ளத்தில்), முன் - முன்பு (அநாதிகாலமாக), நினைந்தார் - எண்ணியருளிய திருமாலினது, பொருப்பு - திருமலை; (எ - று.)

விள் - வினைத்தொகை. வட்டச்சிலாதலம் மரை சேர் - "வண்மைதிகழ் வெண்பளிங்கு வட்டத்திற் கண்டுயில் மான்" என்றார். 50 - ஆஞ் செய்யுளிலும். சிலாதலம் - வடமொழித்தொடர். தாம் - தாவும் என்னுஞ் செய்யுமெ னெச்சத்து ஈற்றுயிர்மெய் சென்றது. எள் - மிக்க சிறுமைக்கு எடுத்துக் காட்டிய அளவை "காண விரும்பினர்மேல் நான் மடங்காம் ஆர்வத்தார்" என்றபடி அடியவரது பக்தியினளவினும் பலமடங்கு அதிகமான பரமகாரு ணியத்தையுடைய கடவுளாதலால், தமது திருவடியை எள்ளளவேனும் சிந்தித்து உருகியவர் பரமபதஞ்சேர்வாராக வென்று திருவுள்ளம்பற்றும் இயல்பினரென்க. முன்னியென்றும் பதம்பிரித்து உரைக்கலாம். "பாதமுன்னி நைந்தார்," "போதமுன்னினைந்தார்" என்றவிடத்து நகரவேறுபாடு திரிபு நயத்தின்பொருட்டுக் கொள்ளப்பட்டிலது. பரமபதம் - சிறந்தஇடம். போத எனப் பதம்பிரித்து, மிகுதியாக என்றலும் ஒன்று. முன் - அவர் எண்ணுவதற்கு முன்னமே யென்றுமாம். போத முன் - அவர்கள் வருவதற்கு முன் என்றுமாம்.

(88)

89.போதா விருசுடரும் போதுதற்கு மோதுதற்கும்
வேதாவி னான்முடியா வேங்கடமே - மாதாவின்
வீங்குதனத் துக்கினியான் விம்மியழா தாட்கொண்டான்
றாங்குதனத் துக்கினியான் சார்பு.

(இ - ள்.) போதா - (கற்பகாலமளவும்) அழியாத, இரு சுடரும் - சூரிய சந்திரர் இருவரும், போதுதற்கும் - (ஆகாயவீதியிலே) செல்லுவதற்கும், வே தாவினால் முடியா - மூங்கில்கள் அளாவி வளர்தலால் இயலாத: ஓதுதற்கும் - (தனது மகிமையைச்) சொல்லுவதற்கும், வேதாவினால் முடியா (நான்கு முகமுடைய) பிரமனாலும் நிறைவேறாத: வேங்கடமே -,- மாதாவின் - தாயினது, வீங்கு தனத்துக்கு - பருத்த தனங்களை யுண்ணுதற்