பொருட்டு, இனி யான் விம்மி அழாது - இனிமேல் நான் ஏங்கி யழாதபடி, ஆள்கொண்டான் - (என்னை) அடிமைகொண்டவனும், தாங்கு தன் நத்துக்கு இனியான் - கையி லேந்தியுள்ள தனது (பாஞ்சஜந்ய மென்னுஞ்) சங்கத்துக்கு இனியவனுமான திருமால், சார்பு - சார்ந்திருக்குமிடம்; (எ - று.) போதா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்: போது - பகுதி. இதற்கு - (அல்லும் பகலும் அநவரதமும் சஞ்சாரம்) ஒழியாத என்று உரைப்பினுமாம். சுடர் - ஒளி, சோதி. தாவினால் - தாவு என்ற முதனிலைத் தொழிற் பெயரின் மூன்றாம்வேற்றுமை விரி; இன் - சாரியை; இதனை எதிர்கால வினையெச்சமாகக் கொள்ளின் சிறவாது. முடிதல் - இயலுதலும், முற்றுதலும், வேதா, மாதா - வடசொற்கள். இனி எனக்குப் பிறப்பில்லாதபடி அடிமைகொண்டவ னென்பது, மூன்றாமடியின் கருத்து. "வீங்கு தனம்" என்றது, வெறுப்பைக் காட்டும். நந்து என்பது நத்துஎன மென்றொடர் வன்றொடராயிற்று. "நத்துக்கு இனியான்" என்றது, அதனை எப்பொழுதும் கைவிடாமையும், வேண்டும்பொழு தெல்லாம் வாய்வைத்துக் கொள்ளுதலும் முதலியன பற்றி. இச்சிறப்பை வெளியிட்டு ஆண்டாள் "சந்திரமண்டலம்போல் தாமோதரன் கையில், அந் தரமொன்றின்றி யேறி யவன்செவியில், மந்திரங்கொள்வாயே போலும் வலம்புரியே, இந்திரனு முன்னோடு செல்வத்துக்கேலானே" என்றும், "உன் னோ டுடனே யொருகடலில் வாழ்வாரை, இன்னாரினையாரென் றெண்ணு வாரில்லைகாண், மன்னாகிநின்ற மதுசூதன்வாயமுதம், பன்னாளு முண்கின் றாய் பாஞ்சசன்னியமே" என்றும், "உண்பதுசொல்லி லுலகளந்தான் வாயமுதம், கண்படைகொள்ளிற் கடல்வண்ணன் கைத்தலத்தே, பெண்படையா ருன்மேற் பெரும்பூசல் சாற்றுகின்றார், பண்பல செய்கின்றாய் பாஞ்ச சன்னியமே" என்றும், "பாஞ்சசன்னியத்தைப் பற்பநாபனோடும், வாய்ந்த பெருஞ் சுற்றமாக்கிழுக் கூறியமை காண்க. இனி, தாங்கு தனத்துக்கு இனியான் என்று எடுத்து, கைகளில் நிரம்பக்கொண்டு செலுத்திய காணிக்கைப் பொருளுக்கு இனியவனென்று உரைப்பினும் அமையும்; அடியார்கள் பிரார்த்தனையாகக் கொடுக்கும் பொருளைக் கைம்மாறாகப் பெற்றுக்கொண்டு அவர்கட்கு வேண்டும் பயனை யளித்தல், திருவேங்கட முடையானது சங்கல்பம். (89) 90. | பேய்க்குமொரு பேய்போன்று பித்தாய்த் திரிவோர்க்கும் | | வேய்க்குமணி முத்திவரும் வேங்கடமே - வாய்க்கமுதூர் | | வண்மைப்பே ராயிரந்தான் மன்னினான் மாவலிபாற் | | றண்மைப்பே ராயிரந்தான் சார்பு. | (இ - ள்.) பேய்க்கும் ஒரு பேய் போன்று பித்து ஆய் திரிவோர்க்கும் - பேயின் கண்ணுக்கும் ஒருபேய்போலத் தோன்றுமாறு பெரும் பைத்தியங் கொண்டு திரிகிறவர்களுக்கும், அணி முத்தி வரும் - (அங்குவந்த மாத்திரத் தால்) அழகியமோக்ஷம் சித்திக்கும்படியான: வேய்க்கும் - மூங்கில்களிலும், மணி முத்து இவரும் - அழகிய முத்துக்கள் மிகுதியாகத் தோன்றப்பெற்ற: |