வேங்கடமே -,- வாய்க்கு அமுது ஊர் - (உச்சரிப்பவருடைய) வாய்க்கு அமிருதம்போன்ற இனிமை சுரக்கிற, வண்மை பேர் ஆயிரம் - வளமான ஆயிரந்திருநாமங்கள், மன்னினான் - பொருந்தியவனும், மாவலிபால் - மகாபலியி னிடத்து, தண்மை பேய் ஆய் இரந்தான் - எளியவனாய் (மூன்று அடிநிலத்தை) யாசித்தவனுமான திருமால், சார்பு - சாருமிடம்; (எ - று.) - தான் - அசை. பேய்க்குமொருபேய்போன்று - பெரும்பேய்போல என்றபடி. அங்ங னம் பித்தாய்த்திரிவோர்க்கும் வேங்கடமலைக்கு வந்த மாத்திரத்தில் முத்தி சித்தித்தலை, இந்நூலுரைத் தொடக்கத்திற் காட்டிய மாதவனென்னும் அந்தணனது வரலாற்றினாலும் அறிக. இனி, "பேயரே யெனக்கு யாவரும் யானு மோர், பேயனே எவர்க்கும் இதுபேசியென், ஆயனே யரங்காவென் றழைக்கின்றேன், பேயனாயொழிந்தே னெம்பிரானுக்கே", "அரங்கனுக் கடியார்களாகி யவருக்கே, பித்தராமவர் பித்தரல்லர்கள் மற்றையார் முற்றும்பித்தரே" என்றபடி பேயாழ்வார்போன்று உலகநடையிற் கலவாமல் பகவத்பாகவத விஷயங்களிற் பக்திப்பித்துக்கொண்டு திரிகின்ற அடியார்களுக்கு முக்தி கைவருவதற்கு இடமான என்று உரைப்பினும் அமையும். முக்திஎன்ற வடசொல் - பற்றுக்களைவிட்டு அடையு மிடமெனப் பொருள் படும். வேய்க்கு என்பதில் நான்கனுருபு ஏழனுருபின் பொருளில் வந்தது, உருபுமயக்கம். பேர்க்கு வண்மை - உச்சரித்தமாத்திரத்தில் அருவினைதொலைத்து நற்பயன்பலவும் அளிக்குந்திறம்; அதனை, "குலந்தரும் செல்வந்தந்திடும் அடி யார்படு துயராயினவெல்லாம், நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அரு ளொடு பெருநிலமளிக்கும், வலந்தரும் மற்றுந்தந்திடும் பெற்றதாயினு மாயினசெய்யும், நலந்தருஞ் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னு நாமம்" என்று திருமங்கையாழ்வார் வெளியிட்டுள்ளார். பேர்ஆயிரம் - ஸஹஸ்ரநாமம். மாவலி - வடசொற்சிதைவு, தண்மைப்பேராய் - யாசகனாய், எளிய வாமநனாய். (90) 91. | வாழ்க்கைமனை நீத்தவரும் வாளரியு மாதங்க | | வேட்கை மறந்திகழும் வேங்கடமே - தோட்கைவிழ | | மாகவந்த னைக்கழித்தார் வாழிலங்கைப் பாதகரை | | லோகவந்த னைக்கழித்தா ரூர். | (இ - ள்.) மனை வாழ்க்கை நீத்தவரும் - இல்லறவாழ்வைத் துறந்த முனிவர்களும், மாது அங்கம் வேள் கைமறந்து இகழும் - மாதர்களின்உடம் பினிடத்துக் காதலை முற்றும் ஒழித்து அதனை இகழப்பெற்ற: வாள் அரியும் - கொடியசிங்கங்களும், மாதங்கவேட்கை மறம் திகழும் - யானையைக் கொல்ல வேண்டுமென்னும் விருப்பத்தோடு வீரம் விளங்கப்பெற்ற: வேங்கடமே -,- மா கவந்தனை - பெரிய கபந்தனென்னும் அரக்கனை, தோள் கை விழ கழித்தார் - தோள்களோடு கூடிய கைகள் அற்று விழும்படி வெட்டித் தள்ளின வரும், இலங்கை வாழ் பாதகரை - இலங்காபுரியில் வாழ்ந்த பாவிகளான |