பக்கம் எண் :

482திருவேங்கடமாலை

பொருள்படும். அமலத்தார் - காமம் வெகுளி மயக்க மென்னும் மலங்க ளில்லாதவர்; மலம் - குற்றம். தாம் - அசை. பெறூஉம் - செய்யுளோ சைகுன்றாதவிடத்தில் இன்னிசைதருதற்பொருட்டுக் குறில் நெடிலாய் நீண்டு அளபெடுத்தது.

(92)

93.வஞ்ச மடித்திருப்பார் வாக்குங் கலைக்கோடும்
விஞ்ச மடித்திருக்கார் வேங்கடமே - கஞ்சப்
பிரமாநந் தத்தான் பிரபஞ்ச மாய்த்த
பரமாநந் தத்தான் பதி.

(இ - ள்.) வஞ்சம் மடித்து இருப்பார் வாக்கும் - வஞ்சனையையொழித் திருக்கின்ற அந்தணர்களுடைய வாயும், விஞ்ச - மிகுதியாக, மடித்த இருக்கு ஆர் - மடித்து மடித்துச் சொல்லப்படுகின்ற வேதங்கள் நிரம்பப்பெற்ற: கலை கோடும் - கலைமான்கொம்பும், விஞ்ச - மிகுதியாக, மடி திருக்கு ஆர் - வளைவோடுகூடிய முறுக்குப் பொருந்தப்பெற்ற: வேங்கடமே -,- கஞ்சம் பிரமா நந்த - (தனது நாபித்) தாமரைமலரில் தோன்றிய பிரமனும் அழிய, தான் -, பிரபஞ்சம் மாய்த்த - (கல்பாந்தகாலத்தில்) உலகங்களை அழித்த, பரம ஆநந்தத்தான் - எல்லா ஆனந்தங்களிலும் மேலான பேரானந்தத்தை யுடையவனான திருமாலினது, பதி - ஊர்; (எ - று.)

வஞ்சம் அடித்து என்றும் பதம் பிரிக்கலாம்; அடித்தல் - ஒழித்தல். வாக் - வடசொல். மடித்த இருக்கு என்பது, மடித்திருக்கு எனப் பெயரெச்ச வீறு தொக்கது; வேட்டகம், புக்ககம், வந்துழி என்றவற்றிற் போல. க்ரமம், ஜடை, கநம் முதலிய சிலவகைகளால் வேதச்சொற்கள் மடித்து மடித்துச் சொல்லப்படுதலால், "மடித்திருக்கு" எனப்பட்டது. ருக் என்ற வடமொழி, இருக்கு என விகாரப்பட்டது; இது, நான்குவேதங்களில் ஒன்றற்குப் பெய ராதலேயன்றி எல்லாவேதங்களுக்கும் பொதுப்பெயராகவும் வழங்கும். கஞ்சம் என்ற வடசொல் - நீரில் தோன்றியதென்று காரணப் பொருள்படும்; தாமரைக்குக் காரணவிடுகுறி. ப்ரஹ்மா, ப்ரபஞ்சம், பரமாநந்தம் - வட சொற்கள். பரமாநந்தம் - தீர்க்கசந்தி பெற்றது. பரமாநந்தத்தான் - பரம பதத்து நிரதிசய இன்பத்தைத் தனது அடியார்க்குத் தருபவன்.

(93)

94.சேலஞ்சுங் கண்மடவார் தேங்குழலுங் கோங்கினமு
மேலஞ்சு வர்க்கமார் வேங்கடமே - கோலஞ்சேர்
மாரிலலங் காரத்தார் மற்றும்பல் பூணணிந்த
காரிலலங் காரத்தார் காப்பு.

(இ - ள்.) சேல் அஞ்சும் கண் - சேல் மீன்கள் (ஒப்புமைக்கு முன் நிற்கமாட்டாமல்) அஞ்சி விலகத்தக்க கண்களையுடைய, மடவார் - மாதர் களின், தேம் குழலும் - நறுமணமுள்ள கூந்தலும், மேல் அஞ்சு வர்க்கம் ஆர் - மேன்மையான ஐந்துவகை பொருந்தப்பெற்ற: கோங்கு இனமும் - கோங்குமரங்களின் தொகுதியும், மேல் அம் சுவர்க்கம் ஆர் - (மிக்கஉயர்ச்சி யால்) மேலேயுள்ள அழகிய சுவர்க்கலோகத்தை அளாவப்பெற்ற: வேங்