96. | நேர்க்கவலை நோயினரு நீடுசிலை வேடுவரும் | | வேர்க்கவலை மூலங்கல் வேங்கடமே - கார்க்கடன்மேற் | | றாண்டுங்கா லத்திறப்பார் தம்மைவிழுங் கிக்கனிவாய் | | மீண்டுங்கா லத்திறப்பார் வெற்பு. | (இ - ள்.) நேர் கவலை நோயினரும் - மிகுதியான கவலையைத் தருகிற நோயையுடையவர்களும், (அந்நோய் நீங்குதற்பொருட்டு), வேர்க்க - (பக்தி மிகுதியால் தம் உடல்) வியர்வையடைய, அலை மூலம் கல் - திருப்பாற்கடலிற் பள்ளிகொண்டருளுகிற ஆதிமூலப்பொருளைத் துதிக்கப்பெற்ற: நீடு சிலை வேடுவரும் - நீண்ட வில்லையுடைய வேடர்களும், வேர் கவலை மூலம் கல் - வேரோடு கவலைக் கிழங்கைத் தோண்டப்பெற்ற: வேங்கடமே -,- கார் கடல் - கருநிறமுடையதான கடல், மேல் தாண்டும் - பொங்கி மெலெழுந்து பரவுகிற, காலத்து - பிரளயகாலத்தில், இறப்பார்தம்மை விழுங்கி - இறக்கிற உயிர்களையெல்லாம் உட்கொண்டு தமது திருவயிற்றினுள் வைத்து, மீண்டும் கால - (பிரளயம் நீங்கியபொழுது) மீளவும் (அவற்றை) வெளிப்படுத்துமாறு, கனி வாய் திறப்பார் - கொவ்வைப்பழம்போற் சிவந்த (தமது) திருவாயைத் திறந்தருள்பவரான திருமாலினது, வெற்பு - திருமலை; (எ - று.) கவலை - கவற்சி; கிலேசம்; 'ஐ' விகுதி பெற்ற தொழிற்பெயர். வேர்த்தல் - பக்திமிகுதியாலாகும் மெய்ப்பாடு. அலை - கடலுக்குச் சினையாகுபெயர். மூலம் - முதற்பொருள். கற்றல் - திருநாமங்களை இடைவிடாமல் உருவிட்டு ஜபித்தல். குறிஞ்சிநிலக் கருப்பொருளாகிய கவலையென்னுங் கொடியின்கிழங்கு, அந்நிலத்துமாக்கட்கு உணவாவதற்கு உரியது. இறப்பார் என்ற உயர்திணை, அஃறிணைக்கும் உபலக்ஷணம். கால - செயவெனெச்சம். (96) 97. | தண்டா மரைச்சுனையிற் சாதகமும் வேடுவரும் | | விண்டாரை நாடுகின்ற வேங்கடமே - தொண்டாக்கி | | யேவத் தனக்குடையா ரென்னைமுன் னாளெடுத்த | | கோவத் தனக்குடையார் குன்று. | (இ - ள்.) தண் தாமரை சுனையில் - குளிர்ந்த தாமரையை யுடைய சுனையில் வாழ்கின்ற, சாதகமும் - சாதகமென்னும் பறவையும், விண் தாரை நாடுகின்ற - மேகத்தின் மழைத்தாரையை விரும்பி உணவாகக்கொள்ளப் பெற்ற: வேடுவரும் - வேடர்களும், விண்டாரை நாடுகின்ற - (உடற்கொழுப் பினாற் போர் செய்தற்குப்) பகைத்தவரைத் தேடப்பெற்ற; வேங்கடமே -,- தொண்டு ஆக்கி ஏவ - தாசனாக்கி அடிமைகொள்ளுமாறு, என்னை தனக்கு உடையார் - என்னைத் தமக்கு உடைமையாக்கிக்கொண்டவரும், முன் நாள் எடுத்த கோவர்த்தனம் குடையார் - முன்னாளில் (கிருஷ்ணாவதாரத்தில்) எடுத்துப் பிடித்த கோவர்த்தநமலையாகிய குடையையுடையவருமான திரு மாலினது, குன்று - திருமலை; (எ - று.) மேகத்தினின்று தரையில் விழுந்த நீர் சாதகப்புள்ளுக்கு விஷமாகுத லால், அப்பறவை அந்நீரை உட்கொள்ளாது மேகத்தினின் றுவிழும் மழைத் |