பக்கம் எண் :

திருவேங்கடமாலை485

தாரையை நாவில் ஏற்றுப்பருகும். விண்டார் - இறந்தகாலவினையாலணையும் பெயர்; விள் - பகுதி; விள்ளுதல் - மனம் மாறுபடுதல். தனக்கு உடையார் - ஒருமைப் பன்மை மயக்கம். ஏவ - குற்றேவல் செய்யுமாறு கட்டளையிட, கோவர்த்தநம் என்ற வடமொழிப் பெயர் - பசுக்களை வளர்ப்ப தென்று பொருள்படும். எடுத்த கோவத்தனக் குடையார் - கோவர்த்தநகிரியைக் குடையாக எடுத்துப் பிடித்தவர்.

(97)

98.வாழரியுஞ் சந்தனந்தோய் மாருதமுந் தாக்குதலால்
வேழ மருப்புகுதும் வேங்கடமே - நீழலமர்
பஞ்சவடி காட்டினான் பாரளப்பான் போலெவர்க்குங்
கஞ்சவடி காட்டினான் காப்பு.

(இ - ள்.) வாழ் அரியும் - (வலிமைகொண்டு) வாழ்கின்ற சிங்கங்களும், தாக்குதலால் - மோதியடித்தலால், வேழம் மருப்பு உகுதும் - யானைகளின் தந்தம்சிந்தப்பெற்ற: சந்தனம்தோய்மாருதமும் - சந்தனமரத்தின் மேற்பட்டு வருகிற காற்றும், தாக்குதலால் - மேற்படுதலால், வேழம் மரு புகுதும் - மூங்கில்களும் நறுமணம் பொருந்தப்பெற்ற: வேங்கடமே -,- நீழல் அமர் - நிழல் பொருந்திய, பஞ்சவடி காட்டினான் - பஞ்சவடியென்னுங் காட்டிடத்தில் வசித்தவனும், பார் அளப்பான் போல் - உலகங்களை அளப்பவன்போல, எவர்க்கும் - எல்லோர்க்கும், கஞ்சம் அடி - தாமரைமலர்போன்ற திருவடியை, காட்டினான் - காட்சிதந்தருளியவனு மான திருமால், காப்பு - (உயிர்களைப்) பாதுகாக்குமிடம்; (எ - று.)

"சந்தனந்தோய்மாருதந் தாக்குதலால் வேழம்மருப்புகுதும்" என்றதை 86 - ஆம் பாட்டில் "குளிர்சந்தின் பக்கத்தில் நிற்கின்ற வேம்பும் மருத்துவவக்கும்" என்பதனோடு ஒப்பிடுக. மாருதம் - வடசொல். உகுதும், புகுதும் என்றவற்றில், து - சாரியை. பஞ்சவடீ - ஐந்து ஆலமரங்களின் தொகுதி; அதனையுடைய இடத்துக்கு ஆகுபெயர்: இது, தண்டகாரணியத்தில் அகண்ட கோதாவரிக் கரையில் நாசிகாதிரியம்பகத்துக்குச் சமீபத்தி லுள்ளது. இராமபிரான் வனவாசஞ்செய்கையில் அகஸ்தியமுனிவர் சொன்னபடி இவ் விடத்தில் நெடுநாள்வசித்தனன். பஞ்சவடிக்காட்டினான் என வரற்பாலது, திரிபுநயம் நோக்கிக் ககரவொற்றுத் தொக்கது. காட்டினான் என்பது - மூன்றாமடியில் காடுஎன்ற பெயரின்மேற் பிறந்த குறிப்பு வினையாலணையும் பெயரும், நான்காமடியில் காட்டு என்ற பிறவினைப் பகுதியின்மேற் பிறந்த இறந்தகாலத் தெரிநிலை வினையாலணையும் பெயருமாம்.

(98)

99.எவ்விடமு மாறுதோய்ந் தெல்லோரும் பல்பாம்பும்
வெவ்விடரி னீங்கியெழும் வேங்கடமே - தெவ்விடையே
ழட்டவனா கத்தணையா னாதிமறை நூன்மார்க்கம்
விட்டவனா கத்தணையான் வெற்பு.

(இ - ள்.) எல்லோரும் -, எ இடமும் - (அம்மலையில்) பலவிடத்தும் உள்ள, ஆறு - நதிகளில், தோய்ந்து - முழுகி. (அம்மாத்திரத்தால்,) வெம் இட