ரின் நீங்கி எழும் - கொடிய (பிறவித்) துன்பத்தினின்று நீங்கி எழப்பெற்ற: பல் பாம்பும் - பலபாம்புகளும், வெம் விடரின் நீங்கி எழும் - வெவ்வியமலை வெடிப்புக்களினின்று புறப்பட்டு மேலெழுந்து வரப்பெற்ற: வேங்கடமே -,- தெவ் விடை ஏழ் அட்டவன் - பகைமையையுடைய ஏ" எருதுகளை வலியழித்து வென்றவனும், நாகத்து அணையான் - ஆதிசேக்ஷனாகிய சயநத்தை யுடையவனும், ஆதி மறை நூல் மார்க்கம் விட்டவன் ஆகத்து அணையான் - பழமையான வேதசாஸ்திரங்களிற்கூறிய நன்னெறியை விலகினவனுடைய மனத்திற் சேராதவனுமாகிய திருமாலினது, வெற்பு - திருமலை; (எ - று.) "ஆறு தோய்ந்து இடரின் நீங்கி யெழும்" எனவே, அங்குள்ள ஆறுகள் தம்மிடத்து ஒருகால் மூழ்கினவளவிலே வினைத்துன்பங்களை யெல்லாம் தீர்க்கும் மகிமையுடையனவென்று விளங்கும். வெவ் - வெம்மையென்ற பண் புப்பெயர் ஈறுபோய் முன்நின்ற மகரமெய் வகரமாயிற்று. எல்லோர் - எல்லார் என்பதன் ரகர வீற்றயல் ஆகாரம் ஓவாயிற்று. தெவ் - பகைமையுணர்த்தும் உரிச்சொல்; "தெவ்வுப் பகையாகும்" என்பது, தொல்காப்பியம். விடையே ழடர்த்த விவரம்: - கண்ணன் நப்பின்னைப் பிராட்டியைத் திருமணஞ் செய்துகொள்ளுதற்காக, அவளது தந்தை கந்யாசுல்கமாகக் குறித்தபடி, யாவர்க்கும் அடங்காத அசுராவிஷ்டமான ஏழெருதுகளையும் ஏழுதிருவுருவக்கொண்டு சென்று வலியடக்கித்தழுவின னென்பதாம். விடை - வ்ருஷம் என்ற வடசொல்லின் சிதைவு. நாகம் என்ற வடசொல் - கால்க ளால் நடவாத தென்றும், மலைகளில் அல்லது மரங்களில் வாழ்வ தென்றும் காரணப்பொருள் படும். வேத சாஸ்திரங்களிற் கூறியபடி நடவாதவரை உபேட்சித்தல், திருமாலின் இயல்பு. அணையான் என்பது - மூன்றாமடியில் அணைஎன்னும் பெயரின்மேற் பிறந்த உடன்பாட்டுக்குறிப்பு வினையாலணை யும்பெயரும், நான்காமடியில் அணைஎன்னும் வினைப்பகுதியின்மேற் பிறந்த எதிர்மறைத் தெரிநிலை வினையாலணையும் பெயருமாம். (99) 100. | பாடு மதுகரமும் பச்சைத் தழைக்குடிலின் | | வேடு மணமருவும் வேங்கடமே - நீடு | | மகரால யங்கடந்தார் வாழ்வசுதே வர்க்கு | | மகரால யங்கடந்தார் வாழ்வு. | (இ - ள்.) பாடும் மதுகரமும் - இசைபாடுவதுபோல ஒலிக்கின்றவண்டு களும், மணம் மருவும் - (மலர்களின்) நறுமணம் பொருந்தப்பெற்ற: பச்சை தழை குடிலின் - பசுமையான தழைகளால் அமைக்கப்பட்ட குடிசைகளில், வேடும் - வேடர்களும், மணம் மருவும் - கலியாணம் செய்யப்பெற்ற: வேங்கடமே -,- நீடு - நீண்ட, மகராலயம் - கடலை, கடந்தார் - தாண்டியவரும், வாழ் வசுதேவர்க்கு மகர் - வாழ்வையுடைய வசுதேவர்க்குப் புதல்வரானவரும், ஆலயங்கள் தந்தார் - கோயில்களைத் தந்தருளியவருமான திருமால், வாழ்வு - வாழுமிடம்; (எ - று.) மதுகரம் - வடசொல்; தேனைச் சேர்ப்ப தென்று காரணப்பொருள்படும். பச்சை - ஐவிகுதிபெற்ற பண்புப்பெயர்: பசு என்ற பண்படி தன் |