பக்கம் எண் :

திருவேங்கடத்தந்தாதி607

தாகத்தோன்றியதோ ராலமரத்தின் இளமையானஇலை யென்பார், "ஆலினிளங்கற்றிலை" என்றார். சிறுமை + இல் = சிற்றில்; பண்புப்பெயர் ஈறுபோய்த் தன்னொற்றுஇரட்டிற்று: இல் - வீடு.

தியானநிலையிலே ஐயங்காரது அகக்கண்ணுக்குப்புலனாகிமறைந்த எம்பெருமான் மீளவும்வந்து தோன்றானாக, இவர் தம்மினும்விலக்ஷணரான வேறு பல அடியார்கள்பக்கல் அன்பினால் தம்மை உபேக்ஷித்தனனென்று கொண்டு கலங்கி, அக்கலக்கமிகுதியால் 'இனி அவன்தானேவந்தாலும், மீளவும்பிரிந்து வருத்துவனாதலால், யாம் கண்ணெடுத்துப்பார்ப்பதில்லை' என்று பிரணயரோஷங் கொண்டிருக்கிறநிலையில், அடியவரைக்கைவிடாத இயல்புடையனான அப்பெருமான் மீளவும்வந்து அவர்க்குவந்தேறியாயுள்ள பராமுகத்தன்மையைப் போக்கி அவரை அபிமுகராக்கிக்கொள்ளப் பலவகையால் முயன்றபோது, அவர் தமதுமுந்தினமநஸ்தாபந் தோன்ற அப்பெருமானைநோக்கிப் பேசும் வார்த்தை, இதற்கு உள்ளுறைபொருள். "முற்றில்" என்றது, கொள்வன தவிர்வன ஆய்ந்துணரவல்ல விவேகத்தை. "பந்து" என்றது, சரீரத்தை; ஸத்வகுணம் ரஜோகுணம் தமோகுணம் என்கிற மூன்று குணங்களோடு விசித்திரமான கர்மமாகிய கயிறுகொண்டு கட்டி எம்பெருமான் அந்த ராத்மாவாயிருந்து செலுத்த விழுந்தும் எழுந்தும் சுழன்றும் உழன்றும் சமயபேதத்தால் விரும்பவும் வெறுக்கவும் படுவதான உடம்பு, செந்நூல் வெண்ணூல் கருநூல்கொண்டு புனையப்பட்டு உரியவர் விளையாட்டாகச்செலுத்த விழுந்துஎழுந்து சுழன்றுஉழன்று கூடியநிலையில் விரும்பவும் கூடாத நிலையில் வெறுக்கவும் படுவதான பந்தென்னத் தகும். "கழங்கு" என்றது, ஐம்பொறிகளை: ஐம்புலநுகர்தற்கருவியான பஞ்சேந்திரியங்கள், சிறுகி அஞ்சாயிருக்கிற விளையாட்டுக்கருவியான கழங்குக ளெனப்பட்டன. இவற்றை முன்பு அவன் கொண்டு ஓடியதாவது - இவருடைய விவேகம் முதலியவற்றை முன்னமே அவன் இவர்வசமின்றித் தன்வசப்படுத்திக் கொண்டமை. மற்றும் இவருடைய ஐம்புலன் முதலியவற்றையும் அவன் வலியத் தன்வசப்படுத்திக்கொண்டதை "பின்னும்அற்றிலை தீமை" என்று குறித்தார். இடையிலே அவன் உபேக்ஷித்துவிட்டதாக இவர் கருதிக் கொண்ட வெறுப்பினால், அந்நன்மையையே "தீமை" என்றார். 'அவைபொறுத்தோம்' என்றது, நீசெய்கின்ற செயல்கட்கெல்லாம் இலக்காம்படி யாம் பரதந்திரமாயிருந்தோ மென்றபடி; பன்மை, தனித்தன்மைப்பன்மை யென்றாவது, அன்பர்களைக் கூட்டிச்சொன்ன தென்றாவது கொள்ளத்தக்கது. 'தொல்லையாலி னிளங்கற்றிலைமேல்துயில் வேங்கடவா' என்றது, லோகரக்ஷணத்தில் ஜாக்கி ரதையுள்ளவனே யென்றபடி. 'இல்' ஆவது, போகாநுபவத்திற்கு உரிய இடம். 'சிற்றில்' என்றது, சிற்றின்பநுகர்ச்சிக்கு உரிய பிரபஞ்சவாழ்க்கையை. உனது திருவடிஸ்பரிசத்தால் எனது இவ்வுடல்வாழ்விலாசையை யொழித்த தற்கு ஈடாக மீண்டும் இவ்வகைநிலையிலாவாழ்க்கையைத் தராமல் பெருவீடான பரமபதத்தைத்தந் தருள்க வென்பது, இறுதிவாக்கியத்தின் கருத்து. இடையீடுள்ள நினது அநுபவமாயின் எமக்கு வேண்டா: நிரந்தராநுபவம் தந்தருள்வதானால் தந்தருள் என்ற போக்கு அமைய "பெருவீட்டினைச்