பக்கம் எண் :


சரித்திர ஆராய்ச்சிக் குறிப்புக்கள்769

 

சோழர்கள்

மகேந்திரவர்மப் பல்லவனுக்குப் பின் இரண்டு மூன்று நூற்றாண்டுகளில் பல்லவருடைய ஆட்சியின் செல்வாக்குக் குறையச், சோழர்கள் தலைநிமிர ஆரம்பித்தனர். அவர்களால் தமிழரது நாகரிகமும், சைவ சமயமும் முன்னேற்றம் அடைந்தன. பிற நாட்டார் வியக்கும்படியான பெரிய ஆலயங்களை எடுப்பித்தார்கள்; தமிழர் செல்வாக்கு கடல் கடந்தும் சென்றது. பல்லவர் காலத்தில் குகைக் கோயில்களும் அவைகளின் ஓவியங்களுமே சிறந்திருந்தன. அதற்குக் காரணம் சமணர் ஆதிக்கமாகும். சோழர்களது காலத்தில், செதுக்கின கல்லால் எடுப்பித்த கோயில்களும் கற் சிற்பங்களும் மேம்பாடடைந்தன. இவை சைவக் கலையின் முதிர்ச்சியாகும். சோழர்கள் சைவ சமயாசாரியர்களுடைய பதிகங்களைச் சேகரித்து ஆலயங்களில் ஓதும்படி செய்தார்கள். நாயன்மார்களின் திருவுருவங்களை ஆலயங்களில் தாபித்தார்கள். அவற்றின் வழிபாட்டிற்கு வேண்டியதான தருமங்களையும் செய்தார்கள். இவ்விதத் திருப்பணிகளில் சிறப்பு வாய்ந்தது தஞ்சை இராசராசேச்சுவரத்தில் காண்பதேயாகும். இவ்வற்புதமான ஆலயத்தை எடுப்பித்தவர் முதல் இராசராச சோழ அரசர் (கி. பி. 985 - 1013) என்ற மன்னர் பெருமான். இப்பெரும் மன்னருக்குச் சிவபாதசேகரர் என்ற பெயரும் உண்டு. அப்பெரிய ஆலயத்தில் இவர் ஆடவல்லான் மூர்த்தியைத் தாபித்து, நாயன்மார்களின் உருவங்களையும் நிலை நிறுத்தினார். இவ்வரசரது ஆணைப்படி இவ்வரிய திருப்பணிகளைச் செய்தவர் இவ்வாலயத்து மேற்பார்வை பார்த்து வந்த பொய்கை நாட்டுத் தலைவரான ஆதித்தசூரியன் என்ற தென்னவன் மூவேந்தவேளான் என்ற பிரபு. இவர் கி.பி. 1013-14-ல் திருஞானசம்பந்தடிகள், திருநாவுக்கரையர், நம்பி ஆரூரனார், நங்கைபரவையார் முதலான அடியார்களின் திருவுருவங்களை இக்கோயிலில் பிரதிட்டை செய்தார். அக்கல்வெட்டானது (S. I. I. Vol. II No. 38) "ஸ்வஸ்தி ஸ்ரீ உடையார், ஸ்ரீ ராஜராஜீசுரம், உடையார்க்கு ஸ்ரீ கார்யம் செய்கின்ற பொய்கை நாடு, கிழவன் ஆதித்தன் சூரியனான, தென்னவன் மூவேந்த வேளான் ஸ்ரீ ராஜ ராஜீசுரம் உடையர் கோவிலில் யாண்டு இருபத்தொன்பதாவதுவரை எழுந்தருளுவித்த செப்புப் பிரதிமங்கள்.......

உடையார் கோயில் முழத்தால் அளந்தும் ரத்னங்கள் சரடுநீக்கி தக்ஷிணமேருவிடங்கன் என்னும் கல்லால் நிறை எடுத்தும் பொன் ஆடவல்லான் என்னும் கல்லால் நிறை எடுத்தும் கல்லால் வெட்டினபடி.


பாதாதிகேசம் இருபத்து இருவிரலே இரண்டு தொரை உசரத்து இரண்டு திருக்கை உடையராகக் கனமாக எழுந்தருளுவித்த திருநாவுக்கரையர் ப்ரதிமம் ஒன்று - இவர் எழுநந்தருளி நின்ற இருவிரலே ஆறுதொகை உசரத்து பத்மம் ஒன்று, இதனோடுங் கூடச் செய்த எண்விரலே ஆறுதொரைச் சமசதுரத்து நால்விரல் உசரத்து ஒன்று.

1014-ம் ஆண்டில் சமயாசாரியார் மூவர்க்கும் பெரிய பெருமாளுக்கும் பல தானங்களைச் செய்தது (Vol. II No. 41 இல்) அடியிற்கண்ட கல்வெட்டில் கண்டிருக்கிறது.

"ஸ்வஸ்தி ஸ்ரீ உடையார் ஸ்ரீ ராஜ ராஜீஸ்வர முடையார்க்கு ஸ்ரீ கார்யம் செய்கின்ற பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூர்யனான தென்னவன் மூவேந்த வேளான் தான் எழுந்தருளுவித்த நம்பியாரூரனார்க்கும், திருஞான சம்பந்தடிகளுக்கும், திருநாவுக்கரைய தேவர்க்கும் உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவர்க்குயாண்டு மூன்றாவதுவரை குடுத்த தாரநிலைவிளக்கு ஒன்று இருப்பு நாராசம் உட்பட நிறை நாற்பத்தெட்டுவரை இவனே தான் எழுந்தருளுவித்த