பக்கம் எண் :


அற்புதத் திருவந்தாதி947

 

றென்பணிவீ ரென்றும் பிரிந்தறியீ ரிங்கிவருள்
அன்பணியார் சொல்லுமினிங் கார்.

95

குலமங்கையாகிய அந்த உமையம்மையார் ஒரு பாகத்தினின்றும் பிரியா திருப்பார்; ஓர் சலமகளாகிய இந்தக் கங்கையம்மையாரும் இங்குச் சடையினின்றும் நீங்கார்; வெள்ளிய நீற்றினையும் எலும்பினையும் அணியும் இறைவரே! நீவிரும் இவர் இருவரையும் பிரியமாட்டீர்; இங்கு இவ்விருவருள்ளே உமக்கு அன்பினால் அணிமையுடையார் யாவர்? சொல்லுமின்.

அவள் - இவள் - என்பன வாளா பெயராய் நின்றன; ஈதே - அகலாமையின் இவ்வாறே; நீறு - என்பு - அணிவீர் - சங்காரத்தில் இவ்விரண்டும் ஓரிடத்து ஒரு காலத்தில் வருவன; இவற்றை ஒன்றுபோலத் தாங்குதல்போல இவ்விருவரையும் வைத்தீர் என்பதும் குறிப்பு. நீறு - பரையின் உருவம்; "பாராவண மாவது நீறு" என்பதும் கருத்து. "இவருள் இங்கு அன்பு அணியார் ஆர்; சொல்லுமீன் என்று முடிக்க. அன்பு - அன்பினால்; மூன்றனுருபு தொக்கது. சத்திகளிரண்டையும் போற்றியது.

95

ஆர்வல்லார் காண வானவனை யன்பென்னும்
போர்வை யதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல
தாயத்தா னாமுந் தனிநெஞ்சி னுள்ளடைத்து
மாயத்தால் வைத்தோ மதித்து.

96

நாமும் அரனை, அன்பென்னும் போர்வையினால் மூடி வைத்து நமக்குச் சிறப்பாகிய உரிமையினால் பிறரறியா வண்ணம் தனியாக நமது மனத்தில் அடைத்து மறைத்து வைத்தோம்; ஆதலினால் யார் அவரைக் காணவல்லார்கள்? (ஒருவருமிலர்).

மாயத்தால் மறைத்தலும், போர்வையாற் பொதிதலும், உள்ளடைத்தலும் என்று மூன்று கோட்டைகளுள் சிறை வைத்தோம் என்பது. ஏகதேச உருவகம். ஆர் - எம்போல்வாரன்றி வேறு யாவர் என்பதாம். நாமும் - பிற கணங்களேயன்றி நாமும் என இறந்தது தழுவிய எச்சவும்மை. அன்பென்னும் போர்வை - போர்வை - இங்குப் பொதிதற்குபகரிக்கும் சாதனம் என்ற பொருளில் வந்தது. தாயம் - பிறப்புரிமை. அறிவுடை யுயிர்க்கெல்லாம் பொதுவுரிமையாதலன்றிப், "பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்து" சேர்ந்த உரிமை என்று அம்மையார்க்குச் சிறப்பாயுரியது. நெஞ்சினுள் தனியடைத்து - என்க. தனியடைத்தல் காவல் சிறந்ததொரு சிறைவிசேடம். தனிக்காவல். Solitary confinement என்பர் நவீனர். மாயம் - பிறரறியாமற் செய்யும் உபாயம் என்ற பொருளில் வந்தது. "நாடி நாரண னான்முக னென்றிவர், தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ? மாடமாளிகை சூழ்தில்லை யம்பலத், தாடி பாதமென் னெஞ்சுளிருக்கவே" (குறுந்.); "சிறையிடல்போல்" (காஞ்சிப் புரா.) அடிமைத் திறத்தின் பெருமிதம் கூறியது.

96

மறைத்துலக மேழினிலும் வைத்தாயோ? வன்றேல்
உறைப்போடு முன்கைக்கொண் டாயோ? - நிறைத்திட்
டுளைந்தெழுந்து நீயெரிப்ப மூவுலகு முன்புக்
களைந்தெழுந்த செந்தீ யழல்.

97

(இறைவரே) நீர் எரிப்ப உளைந்து எழுந்து மூ உலகும் நிறைத்திட்டு அளைந்து எழுந்த செந்தீ அழல் - நீர் எரிக்கும்போது சுழித்து முண்டெரிந்து