பக்கம் எண் :


948திருத்தொண்டர் புராணம்

 

மூவுலகிலும் உள்ளே புகுந்து விரவி எழுந்த சிவந்த தீயினை; உலகம் ஏழினும் மறைத்து வைத்தாயோ? - ஏழுலகங்களிலும் அறியாதபடி மறைத்து வைத்தீரோ?; அன்றேல்...கொண்டாயோ? - அன்றி, வலிமையுடனே உமது கையினிற் பொதிந்து வைத்துக் கொண்டீரோ?

நீ என்ற முன்னிலை தொக்கு நின்றது. இதனால் இறைவர் ஆடும்போது இடக்கையிலேந்திய தீயைச் சிந்தித்துப் போற்றியது உலகமேழினும் வைத்தல் -கடலினுள் மறைந்து நின்று ஊழியில் பெருகிக் கடலைச் சுவற்றி உலகை எரிக்கு வடவையை உலகினுள் பொதிந்து வைத்தல் உயிர்த்தன்மை காக்கும் சாடராக்கினி என்றலுமாம். ஏழுலகம் என்றது மேல் கீழ் உள்ள ஏழு என்ற எண் கொண்ட உலகம்; பின்னர் மூவுலகென்றது மேல் கீழ் நடு என்ற மூவகை குறித்தது; உலகம் ஏழு என்றது உயிர்கள் வரும் ஏழு பிறப்பு என்ற குறிப்புமாம். தீயின் கூறே உயிர்களின் உடலுக்குள் நின்று வளர்த்தல் காண்க. உறைப்பு - என்றது தீயைக் கை ஏந்தும் அருமை குறித்தது. வைத்தாயோ? கைக் கொண்டாயோ? என்றது, சங்காரத்தில் நீ எரிக்கும் அத்தீ, உலகில் முன்னரே வைப்பாக வைத்த தீயை வளர்த்தபடியோ? அன்றி, உன்கையில் கொண்ட தீயைக் கொளுவியபடியோ? என்றதாம். உளைதல் - சுழித்து மேலெழுதல்; அளைதல் - உள் விரவுதல்; செவ் - வழல் என்ற கூட்டுக. தீ - அழல் தீய்க்கின்ற அழல்; வினைத் தொகை. ஒரு பொருட் பன்மொழியுமாம்.

97

அழலாட வங்கை சிவந்ததோ? வங்கை
யழகா லழல்சிவந்த வாறோ? - கழலாடப்
பேயாடு கானிற் பிறங்க வனலேந்தித்
தீயாடு வாயிதனைச் செப்பு.

98

பேய்கள் ஆடுகின்ற காட்டினிடமாக வீரக் கழல் ஆடும்படி தீவினைக் கையிலேந்தித் தீயினடுவே ஆடுகின்றவரே! தீயினிடை ஆடுதலினால் உமது திருக்கை சிவந்ததோ? அன்றேல் கையின் அழகினால் அழல் சிவப்பாயிற்றோ? சொல்வீராக.

அனலேந்தி - தீயாடுவாய் என்பவற்றை எதிர் நிரனிறையாக அழல் சிவந்தவாறோ கை சிவந்ததோ? என்றவற்றுடன் கூட்டுக. நீர் நின்று ஆடுகின்ற அனலால் கை சிவந்ததோ? ஏந்துகின்ற அனல் கையினாற் சிவப்புப் பெற்றதோ? என்க. அழல் வண்ணன் - அனலேந்தி - அனலாடும் திறத்தை, முன் பாட்டில் கருத்தைத் தொடர்ந்து கொண்டு போற்றியது. கழல் ஆட - அட என்றது ஆட என நீண்டதென்று கொண்டு கையில் ஏந்திய அழல் வெதுப்ப என்றலுமாம்.

செப்பேந் திளமுலையாள் காணவோ? தீப்படுகாட்
டப்பேய்க் கணமவைதாங் காணவோ? - செப்பெனக்கொன்
றாகத்தா னங்காந் தனலுமிழு மைவாய
நாகத்தா யாடுன் னடம்.

99

ஐந்தலை நாகத்தையுடையவரே! நீர் ஆடுகின்ற நடனம் உமையம்மை காணவே சுடுகாட்டில் பேய்க் கணங்கள் காணவோ? எமக்கு ஒன்றாகச் சொல்வீராக.

முன் பாட்டில் தீயாடும் திறம் போற்றியதனைத் தொடர்ந்து, அக்கூத்தில் இரண்டு திறங்களையும் போற்றியது. அம்மைகாண ஆடுதல் புனருற்பவத்தின் பொருட்டும், பேய்க்கணங் காணச் சுடுகாட்டில் ஆடுதல் சங்காரத்தின் பெருட்டு மாதல் குறிக்க ஒன்றாகச் செப்பு என்றார். சங்காரம் மீளச் சிருட்டித்தற் பொருட்