பக்கம் எண் :


அற்புதத் திருவந்தாதி949

 

டாதலின் இவை தம்முள் வேற்றுமையின்மையும் குறிப்பாலுணர்த்தி யருளியபடி. அனலுமீழ்தல் - அணுகியோரைத் தீப்போல வெதுப்பும் விடத்தைக் கக்குதல்.

99

நடக்கிற் படிநடுங்கு; நோக்கிற் றிசைவேம்;
இடிக்கி லூலகனைத்து மேங்கும் - அடுக்கற்
பொருமேறோ? வானேறோ? பொன்னொப்பாய்! நின்னே
றுருமேறோ? வொன்றா வுரை.

100

பொன்னார்மேனி இறைவரே! உமது இடப ஏறு நடந்தால் உலகம் நடுங்கும்; உருத்துப் பார்த்ால் அத்திசை வெந்துபோம்; உங்காரம் செய்தால் உலகெல்லாம் அஞ்சும்; அதனால், அது சிங்கம் தானோ? இடபம் தானோ? இடி ஏறோ? இதனை ஒன்றாக உரைப்பீராக.

அடுக்கல் பொரும் ஏறு - மலையில் சரித்து எல்லா மிருகங்களையும் பொருது வெல்லும் சிங்கம். உரும் ஏறு - ஆண்இடி. நோக்கில் - கனன்று பார்க்கில்; கனன்று என்பது ஆற்றலால் வந்தது. கனலுதல் - பகையானாரைப் பார்த்து அழித்தல். "அண்ண லரண் முரண் ஏறு" (தேவா) என்றபடி அடைந்தாரைக் காக்கும் பொருட்டு இவ்வாறு நோக்குதல். திசை - பார்த்த அத்திசை. பொருமேறு முதலிய மூன்றினையும் நடக்கில் முதலிய மூன்றுடனும் நிரனிறையாகக் கூட்டிக்கொள்க. இப்பாட்டால் இறைவர் அடியார்க்கு அருள, ஊர்ந்துவரும் இடபத்தைப் போற்றியபடி. இதனோடு அந்தாதி நிறைவுறுதலின் ஊர்தியை வாழ்த்தி முடித்தபடியாம். "தோடுடைய செவியன்" என்று இறைவரைப் போற்றிய ஆளுடைய பிள்ளையார் அதனை அடுத்து "விடையேறி" என்று வைத்துப் போற்றிய குறிப்பும் காண்க. ஒன்றா - இம்மூன்றும் வேறாகக் காணப்படினும் ஒரு தன்மையே குறிப்பன என்பது குறிப்பு. "ஆய பசுவு மடலே றெனநிற்கும்" (திருமந்திரம்) என்றபடி இடபப் பசுவைக் குறிப்பதாம். பதியின் ஆணையின் வழியே அது நடத்தல் நோக்கல் இடித்தல் என்று தொழிற்படுங்காலத்து "மாயை தனையுதறி வல்வினையைச் சுட்டுமலம், சாய அமுக்கி" (உண்மை விளக்கம் - 36) என்றபடி மும்மலங்களையுங் களைந்து அருள்பெற்று ஆனந்த வாரிதியில் மூழ்கும் என்ற பொருளும்றொனிப்பது காண்க.

100

உரையினா லிம்மாலை யந்தாதி வெண்பாக்
கரைவினாற் காரைக்காற் பேய்சொற் - பரவுவார்
ஆராத வன்பினோ டண்ணலைச் சென் றேத்துவார்
பேராத காதல் பிறந்து.

101

அன்பினால் இந்த வெண்பாக்களாகிய மாலையை அந்தாதியாகக் காரைக்காற் பேயினால் தொடுக்கப்பட்ட சொல்லினாற் சொல்லி ஏத்துவார்கள் பெயராத காதல் பிறந்து ஆராத அன்பினோடும் சிவபெருமானைச் சென்றேத்துபவராவர்.

அந்தாதி, நூறு பாட்டுக் கொண்டதாதலின் அதற்கு மேல் உள்ளது இப்பாட்டென்று கருதியோ இதற்கு உரை எழுதாது விடுத்தனர் முன் உரைகாரர். அம்மையாரது இரண்டு பதிகங்களிலும் பத்துப் பாட்டுக்கு மேலே பலன் கூறிப் பெயரையும் இலச்சினையிட்ட பதினொன்றாவது பாட்டும் சேர்த்துப் பதிகம் என்றாற்போல, இதுவும் பயனும் பெயரும் கூறி முடித்தலாலும்; முன் பாட்டில் உரை என்ற அந்தத்தையே ஆதியாக உரையினால் என்று வைத்துத் தொடங்கி, முதற்பாட்டில் "பிறந்து மொழி பயின்ற" என்ற ஆதியைக் "காதல் பிறந்து"