செய்திகள் வாசிப்பது கமலா பத்மநாபன் சாலை மரங்கள் எண்ணிக்கையிட்டுக்கொண்டே வந்தோம் 236 ஒதிய மரம் 237 புளிய மரம் 238 ஆலமரம் 239 பனைமரம் 240 ஜாதியில்லா மரம் மர அப்பாவிகள் கண்டுகொள்ளவில்லை. தொலைவில் மலைக்காடுகள் புகை வானோக்குகிறது வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் மரங்கள் நம் தேசத்தின் சொத்து மரத் தரகர்களுக்குக் காடுகளை ஏலம் விடுவோம் வீடுகளை அகலமாய்க் கட்டாதீர்கள் விண்ணை முட்டும்படி கட்டுங்கள் இது சுற்றுப்புறச் சூழல் ஆண்டு தோட்டங்கள் வேண்டும் விளையாட்டு திடல்கள் வேண்டும் பூங்கா வனங்கள் வேண்டும் மார்ச் 22, 1982வரை 1, 82, 48, 352 பதியன்களை நட்டுள்ளோம் புதிய ஆணையின்படி மரங்களை வெட்டுபவர்களுக்கு இரண்டாண்டுகள் கடுங்காவல் தண்டனை இன்றைய தலைவரின் செய்தி உற்பத்தி பெருக வேண்டும் நச்சுத் தொழில்கள் ஒழிக்கப்பட வேண்டும் |