பக்கம் எண் :

116ஆத்மாநாம் படைப்புகள்

கங்கை நீர் சாக்கடையாவதைத் தடுப்போம்
கோடலிகள் உற்பத்தியைச்
சிறு தொழிலாளர்களுக்கு விட்டுவிடுவோம்
மரங்களின் விலை ஏறிவிட்டது
மேன்மேலும் எரிபொருளுக்கும்
வீட்டு வசதிக்கும்
குறைந்த விலையில் மரங்களைக் காணிக்கையாக்குவோம்
காட்டிலாகா அதிகாரிகளுக்குத் துப்பாக்கிகளைக்
கொடுங்கள்
தம்மைப் பாதுகாத்துக்கொள்ளச்
சுள்ளி பொறுக்குவோரை விரட்டியடிக்க

ஆகாசவாணியின் செய்தி இத்துடன் முடிவடைந்தது