பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்123

காற்றும் மழையும் என்னைப் போஷிப்பது போல்
சூரியனும் தன் வைரக் கிரணங்களால்
என்னைப் பார்க்கிறான்
இதமாகச் சில நேரம்
இடமாகச் சில நேரம்
என் இலைகளின் ஒளியை
உலகுக்களிப்பவன் அவன்தான்

எனக்கு எவ்விதப் பிரச்சினையும் இல்லை
நீ என்னைக் கிள்ளினால் ஒழிய

பார் என்னை
நீ யார் என்றுனக்குப் புரியும்