அன்பு அன்பு என்பதே காண அரிதான உலகில் கொடூரம் அளப்பரியதாக உளது ஊசி ஏறிய அவள் கைவிரலில் ரத்தம் கசிகிறது துண்டித்த ஊசி துடித்துக்கொண்டிருக்கிறது மேலாளன் வருகிறான் அவன் வணிகப் பேச்சோடு சிகிச்சைக்கு வேண்டிய அன்பு கூடவா இல்லை துணிகள் எங்கும் சிதறிக் கிடக்கின்றன மனிதன் நிர்வாணமாய்த் திரிகிறான் நகரமெங்கும் அன்பைத் தேடி பயத்துடன் |