பக்கம் எண் :

134ஆத்மாநாம் படைப்புகள்

ஒரு நகர்வு

ஒலி எழுந்தது
மெல்ல நகர்ந்தது
ஒலியைத் தொடர முடிந்தது
சிறிது நேரத்தில்
பிரதான சாலையில்
சங்கமமாயிற்று

இரைச்சலில்
ஒலி உருவிழந்து
உருண்டைப் பந்து போல்
கூச்சலாய் ஓடத் துவங்கிற்று
மற்ற உருவிழந்த
ஒலித்துகள்களுடன்
கச பிச குக கெகெ பிகெ டக்கு புக்கு
பல்வேறு பிரதான சாலைகளின்
உருண்டைப் பந்துகளெல்லாம்
ஒன்று சேர்ந்து
நகரத்தின் மேல்
வட்டமிட்டபடி
வானைக் கீறி
வெளியேறிக்கொண்டிருந்தன
புதிய புதிய ஒலித்துகள்
உருண்டைப் பந்துகளாகி
வானுலகம் சென்றுகொண்டிருந்தன
அமைதியான கிளைச்சாலை ஒன்றின் வழியாய்ச்
சென்றுகொண்டிருந்தேன்
ஒலித்துகள் ஒன்று தட்டுப்பட்டது
லபக்கென்று பிடித்து மாத்திரையாய் விழுங்கினேன்
உள்ளெங்கும் ஒலித்துகள்கள்
ஓடி விளையாடிக்கொண்டிருந்தன
பிரதான சாலையுள் நுழைந்தேன்
நரம்புகள் உப்ப
பந்துபோல் ஆனேன்
உருண்டு பருத்து மேலெழும்பினேன்
வானைக் கீறி
வெளியைக் கீறி
அப்பாலுக்கும் அப்பால்
பயணமாகிக்கொண்டிருந்தேன்
இருளும் ஒளியும் இரு கண்களெனப்