பின்புறமும் முன்புறமும் இருபுறமும் நாற்புறமும் இருக்க முடிந்தது ஒளியுடல் பரந்த வெளி எங்கும் பரந்து விரிந்த இருப்பு இருப்பில் அனைவரும் ஐக்கியம் அனைவருக்கும் ஒரே மனம் பால்வெளியில் நீந்திக் கிடைத்த மனம் தொலைவில் தவித்துக்கொண்டிருக்கும் அறிவு ஒவ்வொன்றாய் ஒளிக்கடலில் ஐக்கியமாகும் ஒலித்துகள்கள் |