அந்தப் புளியமரத்தை நேற்றிலிருந்து அந்தப் புளியமரத்தை வீழ்த்திக்கொண்டிருக்கிறார்கள் முதலில் புளியமரத்தின் உச்சியை அடைந்தார்கள் சிறிய சிறிய கிளைகளை முறித்துக்கொண்டார்கள் இலைகள் மலர்கள் உதிர உதிரச் சிறிய கிளைகள் பூமியைத் தழுவின சிறிய கிளைகள் இழந்த மரம் அருவ உருவில் வானத்தை உறிஞ்சிக்கொண்டிருந்தது மரத்திலிருந்து இறங்கியவர்கள் ஒரு மாபெரும் மரமறுக்கும் ரம்பத்தைக் கொண்டுவந்தார்கள் புளியமரத்தின் அடியைக் குறிபார்த்துக் கீறிக்கொண்டிருந்தார்கள் பொடித்துகள்கள் இருபுறமும் கசிய நெடுமரத்தைச் சாய்த்தார்கள் மீதம் உள்ள கிளைகளையெல்லாம் வெட்டிவெட்டி அடுக்கினார்கள் கட்டை வண்டியில் ஏற்றிப் புறப்பட்டார்கள் இலை தழைகளுக்கிடையே ஒரு புளியஞ்செடி தன்னைப் பார்த்துக்கொண்டது |