பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்139

அமைதி அமைதி - 2

என்னுடைய முதல் அபத்தக் கவிதை
வெளியானது
காற்றைக் கீறியபடி ஒரு புலி
சினிமாக் கொட்டகைக்குள்
ஏழை ஜனங்கள் தூங்கிக்கொண்டிருந்தார்கள்
மெல்ல வாயிலை அடைந்தேன்
ஊறுகாய் ஜாடியும்
உப்பு ஜாடியும்
பக்கத்தில் அமைதியாய் இருந்தது
செலுத்தப்பட்ட அம்புகள் எல்லாம்
மண்ணை முத்தமிட்டு
மீண்டும் உறைக்குள் வந்தன
தளபதி வந்தார்
பரிவாரங்களுடன்
எங்கள் கோயில்களைச் சுரண்ட
புதிய தலைவன் வேண்டும்
கோஷங்கள் எங்கும் அமைதியாய்