விடு* இந்த மரங்களுக்கென் மேல் கருணை உண்டென்றால் என்னை எரித்துவிடு இந்த மலர்களுக்கென் மேல் கருணை உண்டென்றால் என்னைப் புதைத்துவிடு இம்மனிதர்களுக்கென் மேல் கருணை உண்டென்றால் என்னை வாழ விடு இச்சிட்டுக் குருவிகளுக்கென் மேல் கருணை உண்டென்றால் என்னைப் பறக்க விடு *இந்தக் கவிதையை 1981ஆம் ஆண்டு தர்மபுரியில் இருந்து ஹோகேனக்கல்நீர்வீழ்ச்சிக்கு பஸ்ஸில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஆத்மாநாம் எழுதினார். |