பக்கம் எண் :

142ஆத்மாநாம் படைப்புகள்

கேட்கப்படுவதும்
கேட்கப்படாததும்

உலகத்திடமிருந்து நான் எதிர்பார்ப்பது
அன்பை
கருணையை
மனிதாபிமானத்தை
புரிந்துகொள்ளுதலை
உண்மை வெளிப்பாட்டை
இன்னும் பிற
நீ உலகத்திடமிருந்து மிகவும் எதிர்பார்க்கிறாய்
என்கிறது மனித இனம்
நான்
வேலையைக் கேட்கவில்லை
உணவைக் கேட்கவில்லை
குடியிருப்பைக் கேட்கவில்லை
கேட்பதெல்லாம் ஒன்றுதான்
நான் வேறு நீ வேறு
என்பது பொய்
நானும் நீயும் ஒன்றுதான்
என்பதை உணர்
என்றுதான்