ஆரம்பம் இங்கே வருமுன்னர் இருந்தவை பெரும் பாறை ஓயாமல் கூச்சலிடும் புரண்டாடும் இக்கடல் பனிமலை வெயிலில் பளபளக்கும் பேராறு செம்மண் களிமண் வண்டல் மண் காற்று எழுப்பும் பெரும்புழுதி எல்லாம் எங்கெங்கோ இயங்குகையில் உன் வயிற்றில் ஹோம குண்டம் கனன்று கனன்று பந்தாய் விரியும் தீப்பூக்கள் உன்னுள் மேலும் கீழும் ஆகாயம் எங்கும் நிசப்தம் பசுமை ஒரு தூசியின் ஒரு கோடிப் பங்கில் ஒரு சிற்றணுவாய் நான் தோன்றினேன் நக்ஷத்ரக் கண்கள் சிமிட்ட |