பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்147

நீரும் நிலமும்

முட்டி மோதிப் பார்க்கிறது கடல்
மணலைத் தன் நீலப்புடவைக்குள்
சுருட்டிக்கொள்ள மிக
பாசத்தோடும் நேசத்தோடும்
மணல் பாறை - மலையாய் நிற்கிறது
மூன்றில் ஒரு பங்குதான் என்றாலும் இது
நீருருண்டை அல்ல
மண்ணுருண்டைதான்