முடிவு இன்று முடிந்துவிட்டது முடியாமல் தொடர்ந்து முடிவைத் தேடித் தேடி அலையும் கால்கள் சோர்ந்து விழும் படுக்கையில் மனம் மேலே இன்னும் மேலே பறந்து செல்லும் எங்கே முடிவு படபடக்கும் காகிதங்கள் கேலி செய்யும் சலசலக்கும் இலைகள் தாளம் போடும் எப்படி இருக்கும் முடிவு காற்றிலா மண்ணிலா நீரிலா காலம் காலமாய்த் தேடியவர் இருக்கின்றார் ஆழ்ந்த உறக்கத்தில் இம்மண்ணுக்குள் என்றோ என் கனவில் வந்தது முடிவு சரியாகப் புலப்படவில்லை பரந்த வெளியில் நான் சூரியன் தலைப்பக்கம் கடல் காலடியில் எங்கே உன்னைக் காணோம் இவ்வளவு காலமாய் என்றேன் யார் நீ என்றொரு குரல் உன்னைத் தேடி அலுத்த ஆரம்பம் என்று கூற உன்னுள்தான் இருக்கிறேன் என்றது முடிவு பின் இப்போது என்பதற்குள் காலை புலப்பட்டது |