பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்153

பேப்பரில் விதை விதைத்து
ஏரோட்டும் புத்திசாலிகள்

புரட்சிக்காய்க்
காத்திருந்து கொட்டாவி விடும்
புத்திசாலி நடுத்தரங்கள்

வீரமாய் மார்தூக்கி
முதுகைச் சொறியும்
புத்திசாலிப்பன்றிகள்

முதலில் ஒழிப்போம்
நம் புத்திசாலித்தனம்
நிர்வாணமாய் நிற்போம்
நீரலைகள் கரைகளிலே