பக்கம் எண் :

154ஆத்மாநாம் படைப்புகள்

வீழ்ச்சி நிலை ஒன்று

அறிவு எதற்கு
பொருள் எதற்கு
அனுபவங்கள் எதற்கு
காலம் வெளி
ஒன்று இரண்டு
எனத்
தேடித் தேடித் தேடித்
தெளிவின்மையில்
ஒரு சுகங்கண்டு
மருண்டு
அதுவேயாகி
காண்போரைச் சினந்து
ஏன்
ஆர்ப்பரிக்கும் கடலலைகள்
நகைக்க
சிறுமீன்கள் நம்முடனே
மௌன மொழி பேச