பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்159

ஒன்றும் இல்லை

ஒன்றும் இல்லை
சும்மாதான்
வேறு ஒன்றும் இல்லை
ஆரம்பமே ஒன்றும் இல்லை
பின் எப்படி இவ்வளவும்
இவை யாவும் ஒன்றுமில்லை
நானும் நீயுமா?
ஆமாம் ஒன்றுமில்லை
நாம் பேசுவது
நாம் எழுதுவது
நாம் வரைவது
நாம் பதிப்பிப்பது
நாம் படிப்பது
எதுவும் ஒன்றும் இல்லை
பின் எதுதான் அந்த ஒன்று
அதுவும் ஒன்றுமில்லை
ஒன்றுமில்லையில் இவ்வளவா
பின் அந்த ஒன்றில்
நம்மையும் மீறிய ஒன்று