ஆந்ராஸ் மெஸ்ஸி கோஷங்கள் மாறாத வெறுப்பு பொருள்களில் உளதா, கடவுளே ஆனால் பொருட்கள் நம் மூலமாகத்தானே இயங்குகின்றன உன் விற்பனையாளனாக இருக்க மறுக்கிறேன், கடவுளே ... அல்லது சந்தோஷமாய் இப்பொழுது வாங்குங்கள் ராக்கெட்டுகள் அடிபிடி விலையில் வளர்ச்சி குன்றிய தேசங்களுக்காக வசந்த கால விற்பனை *** விட்டுவிடாதீர்கள் எதிர்கால நம்பிக்கையை இது ஒன்றும் பயனற்றதல்ல வெறும் கொஞ்சம் கால முரண்பாடு மட்டுமே நுகரும் சுற்றுலாக்காரர் அனைத்தையும் வாங்குவர், உடைந்த ஒன்றையும்கூட நல்ல விலைக்கு அவற்றைப் பளபளப்பாக்கு புத்துயிரூட்டு *** ஐ. ஜி. ஃபார்பர் தொலைத்துட விடு உன்னுடைய சுரண்டி வாழ எண்ணும் பிரமைகளை அந்த இடத்திலேயே எந்தக் கேள்விகளும் கேட்கப்படுவதில்லை திருப்தி உறுதிப்படுத்தப்படுகிறது இல்லையேல் உங்கள் பணம் திருப்பப்படும் முதல் தர வணிகப் பொருட்கள் *** |