சி. நாராயணரெட்டி நாலு மிருகங்கள் நசுங்கிக் கிடக்கும் ஒரு உடல் நாலு மிருகங்களின் விளையாட்டு இடத்தில் இன்னொரு உயிர் பறந்துவிட்டது உடைந்த எலும்புகளின் துடிப்பிலிருந்து நாள் துவங்கிவிட்டது துக்கச் செய்திகளின் ஊடே பறந்துகொண்டு சூரியன் கீழே இறங்கினான் செங்கிரணங்களை உதைத்துக்கொண்டு இன்னொரு விடியல் வந்தது கரிக்கப்பட்ட முகங்களுக்கான கட்டுக்களுடன் மீண்டும் அந்தி குறி புல்லட்டுக்களுடன் அந்த நாலு மிருகங்கள் என் கண்களில் கிளர்ந்தெழுந்துகொண்டு எரித்து லாரிக் கணக்கில் உடல்களைக் காலத்தின் அடிகளில் உணர்ந்துகொண்டு தெலுங்கு மூலம் : சி. நாராயண ரெட்டி Indian Literature, July-Aug, 1983 |