அவசியம் உள்ளது. கவிஞன் இந்த வாழ்க்கையிலும் சரி, கவிதையிலும் சரி, இதைஎந்த அளவுக்கு உக்கிரமாக உணர்கிறானோ அந்த அளவுக்கு அந்தச் சுயத்திலிருந்து தப்பித்து “வேறு நபர்களில்” தன்னை நிறைத்துக்கொள்கிறான். எம்பிரிகல் சுயத்தின் (Empirical Self) யதேச்சைத்தன்மையும் தொடர்ச்சியின்மையும் கூட இதற்குக் காரணங்களாகின்றன. இதற்கு மிகப் பொருத்தமான எடுத்துக்காட்டு தோற்றம் என்ற கவிதை: தோற்றம் சாதாரண விஷயமில்லை ஒவ்வொருவருக்கும் தோன்றத் தெரிந்திருக்க வேண்டும் நிஜவாழ்க்கையில் மட்டுமல்ல கற்பனை வாழ்க்கையிலும்தான் ... ... ... ஒரு விஞ்ஞானியாக ஒரு தத்துவ வாதியாக ஒரு சிற்பியாக ஒரு ஓவியனாக ஒரு கவிஞனாக ஒரு இசை ரசிகனாக ஒரு நாடக இயக்கக்காரராக ஒரு கூத்துக்காரராக ஒரு நாட்டிய ரசிகராக ஒரு திரைப்படக்காரராக இவற்றில் நாம் யார்? கண்டுபிடிப்பது கஷ்டம் ... ... பொதுவான வாழ்வியலுக்கும் அழகியலுக்கும் ஒரு முரண் உண்டாவதைஇந்தக் கவிதையிலும் கவனிக்கலாம். ஆனால் கவிதையின் இறுதியில் அது சமன்பட்டு, வேறு பிரச்சினையாக மாறி அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிடுகிறது, பட்டியலிடப்பட்டுள்ள முகமூடிகள் அனைத்திலும் சுயம் ஓரளவு கரைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டவுடன், கண்டுபிடிப்புக்குள்ளான சுயமும் கண்டுபிடித்த சுயமும் மாறிப்போய் அடுத்த இயங்கியல்நிலையை எட்டிப் பிடிக்கின்றன. நாம் நாமா, நாம் அதுவா, அவர்களா அல்லது இவர்களா போன்ற கேள்விகளைக் கேட்டுக்கொண்டபொழுதுதான் தனது வரலாற்று நாயகர்களின் வழியாகக் கிடைத்த முகமூடிகளைக்கண்டுபிடித்துக் கொண்டதாய் எஸ்ரா பவுண்ட் எழுதுகிறார்: இதை இதுவரை எந்த மனிதனும் எழுதத் துணிந்ததில்லை, இருப்பினும் நானறிவேன், எவ்வாறு எல்லா உன்னத மனிதர்களின் ஆன்மாக்களும் சில நேரங்களில் நம்மின் ஊடாய்க் கடந்து செல்கின்றனவென்று மேலும் நாம் அவர்களுடன் உருகி ஒன்றிணைந்துவிட்டோம், மற்றுமவை அவர்களின் ஆன்மாக்களின்றி வேறில்லை |