பக்கம் எண் :

22 

இவ்வாறே நான் தாந்தேவாக ஆகிறேன் ஒரு கணம் மறுகணம் ஃபிரான்ஸ்வா விலோன், கதைப்பாடல் - பிரபு மற்றும் திருடன்...

(Personae)

பல வேறுபட்ட வழிகளில் வஸ்துகளுக்கும் வார்த்தைகளுக்கு மிடையிலான இடைவெளியை குறைக்க முயன்றுகொண்டுதானிருக்கிறது கவிதை. வார்த்தை யதார்த்தத்தை நேர் சமமாகப் பிரதிபலிக்கக் கூடியது அல்ல என்பதை நாம் யாவருமே அறிவோம். மனிதர்களுக்கும் அவர்களின் இருப்புக்குமிடையில் சுயப் பிரக்ஞை நுழைந்து இடை வெளியை அதிகரித்துவிடுகிறது. இந்த இடைவெளியைக் குறைக்கும் முயற்சிகள் தென்படுகிற கவிதைகள் ஆத்மாநாமிடம்உண்டு:

சொல்ல சொல்ல
சொற்கள் மயங்கும்
எழுத எழுத
எழுத்து இறக்கும்
எழுத்தும் சொல்லும்

இப்படியான ஒரு சூழ்நிலையில் ‘கண்டுபிடித்துக் கொள்ளப்படும்’
ஒரு வரிகூட அர்த்தம் வாய்ந்ததாக ஆக முடியும்:

குப்பை மேட்டில்
கிடக்கும் பொருட்கள்
வரிகள் ஆகும்

நவீன ஓவியத்திலும் சிற்பத்திலும் “ஃபவுண்ட் ஆப்ஜக்ட்ஸ்” (found objects) என்கிற ஒரு கருத்து உண்டு. யதேச்சையாய்க் கண்டெடுக்கப்படுகிற பொருள்களைச் சிற்பி/ஓவியன் தன் கித்தானிலோ அல்லது சிற்பத்திலோ சேர்த்துவிடும் ஒரு வழக்கமுண்டு. அப்படி எடுத்துச் செருகப்படும், பிரயோகிக்கப்படும் வஸ்துகளுக்கும் ஒரு எல்லை உண்டு. அப்படிப்பட்டதொரு யதேச்சைத் தன்மையைக் கவிதையில் ஆத்மாநாம் கோருகிறாரோ மேற்காட்டப்பட்ட வரிகளில்?

எமர்ஜென்ஸி காலத்தில் எழுதப்பட்ட கவிதைகளைப் பற்றியும்தனி மனித சுதந்திரம் பறிக்கப்படும் நேரத்தில் கவிஞன் எதிர்வினை தர வேண்டிய அவசியங்களைப் பற்றியும் வேலி, சுதந்திரம் உள்ளிட்ட பல கவிதைகள் பேசுகின்றன.

கடவுள் கொள்கை என்ற ஒன்று இருப்பது போல மேலோட்டமாகத் தோன்றினாலும்(தரிசனம்) ஒன்றுக்கும் மேற்பட்ட கவிதைகளில் அதை மறுத்தே பேசுகிறார். காரணம்ஆத்மாநாமைப் பொறுத்தவரை கடவுளின் இடத்தை/மதத்தின் இடத்தை இன்று நிறைந்துக் கொண்டிருப்பது கவிதை. மதத்தின் இடத்தைக் கவிதை எடுத்துக்கொண்டுவிடும் என்று மேத்யூ ஆர்நால்ட் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவதானித்ததை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். இருபதாம் நூற்றாண்டு அமெரிக்கக் கவிஞரான வாலஸ் ஸ்டீவென்ஸ் குறிப்பிட்டார்:

“After one has abandoned a belief in God, poetry is the essence which takes its place as life’s redemption.”

தன்னை அறிதல் என்ற பயணத்தின் இறுதியில் ஒரு சூன்ய நிலையைச் சந்திக்கிறார் ஆத்மாநாம். எனினும் இந்த சூன்யநிலையைச்