கொண்டிருக்கும். அவற்றின் மாறுபடும் பொருள்கள் மட்டுமே நிகழ்காலத்திலிருந்து எதிர்காலத்திற்குக் கடந்து செல்லும். மேலும் சில காகங்கள் பல்வேறு திசைகளிலிருந்து கிழக்கு நோக்கிப் பறந்துகொண்டிருந்தன. இரண்டு பச்சைக்கிளிகள் கூவிக் கொண்டே பறந்தன. எல்லாமே பார்ப்பதுபோல மட்டுமே இருக்கிறது. கைகளை நீட்டித் தொட்டுப் பார்த்தான். எல்லாமே செங்கல் கட்டிடங்கள். நிச்சயம் ஏதோ தவறு நேர்ந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. தலைநிமிர்ந்து மேலே பார்த்தான். ஆகாயம் முழுக்க அவன்பெயர். நான் இல்லை அது என்றான். உரக்கக் கூவினான். எந்தப் புறத்திலிருந்தும் எவ்வித எதிரொலியும் கேட்கவில்லை. அவன் விழித்துப் பார்த்தபோது வேலைக்காரியின் முகம் பூதாகரமாய்த் தெரிந்தது. தேதியைப் பார்த்தான். அவன் குறிப்பிட்டு வைத்திருந்த தேதி கடந்துவிட்டிருந்தது. |