பக்கம் எண் :

218ஆத்மாநாம் படைப்புகள்

கிறான். இந்த அளவில், அவன் தனக்குத்தானே குருவாகி சிஷ்யனுமாகி தன்னையே நிராகரித்துக் கொண்டிருக்கிறான். ஒவ்வொரு முறை அவன் நிராகரிக்கும்போதும் புதியதாய்த் தான் வாழ்ந்த கணம் ஒன்றைப் படைக்கிறான்.

கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் எந்த ஒரு படைப்பாளியும் செல்லரித்து உருவிழந்து தன்னையே உதாரணமாய்க் காட்டி உலகைப் பிரமிக்க வைக்கிறான். அப்பொழுது உலகிற்கான ஒரு குரு கிடைக்கிறான். வழக்கம்போல எந்தவித உபதேசமும் செய்யாமல் குரு இயங்கிக் கொண்டிருக்கிறான். தொடர்ந்து குருவின் சிலையை உருவாக்கும் உளிச் சத்தம் ஒன்றும் குருவின் சிலையை உடைக்கும் உளிச்சத்தம் ஒன்றும் கேட்கிறது.