பக்கம் எண் :

224ஆத்மாநாம் படைப்புகள்

19. காலமென முதலில் உணர்ந்தவன்
கபாலச் சூடு பொரியும்
ஆண்மை நிறைந்தவனாக இருந்திருப்பான்
காளிதாஸ்
20. காகங்கள் முடி புனைந்தால்
கரைச்சல்களே சங்கீதம்
சிறுமைக்கு நீர் வார்த்தால்
தெரு நடுவே முள் வளரும்
தேனரசன்
21. நீ விரும்புவதுன்
உடல் முழுவதும்
ஆகுக.
தேவதச்சன்
22. மொஸைக் தரையில் தவறிப்போன
ஒற்றைக் குண்டூசிபோல்
ஆத்மாநாம்
23. நான் சண்டைபோடாத எல்லோரையும்
நான் விரும்புகிறேன் என்றர்த்தமில்லை
நிம்ல விஸ்வநாதன்
24. தப்ப முடியாதடா,
நிச்சயம்;
எங்கே ஓடுகிறாய்?
காசியபன்
25. வண்ணக் கனவுகளை கண்களில் சுமந்து
இருளில் தடுமாறும் அவஸ்தைகள்
எத்தனை நாள்.
அகல்யா
26. காங்க்ரீட் குறிகள் இந்திரமாய் நிமிர
ரத்தக் குழாய்களில் கழிவு நீர் ஓடும்.
நீலமணி
27. வானிற் பறக்கின்ற புள்ளெலா நான்
மண்ணிற் றிரியும் விலங்கெலா நான்
கானிழல் வளரு மரமெலா நான்
காற்றும் புனலுங் கடலுமே நான்

சுப்ரமண்ய பாரதி
(நான்)
28. கூட்டத்தில் கூடி நின்று
கூவிப் பிதற்றலன்றி
நாட்டத்திற் கொள்ளாரடீ - கிளியே
நாளில் மறப்பாரடீ
சுப்ரமண்ய பாரதி
(நடிப்பு சுதேசிகள்)
29. அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
சுப்ரமண்ய பாரதி
(அக்னிக்குஞ்சு)
30. எங்கெங்கு காணினும் சக்தியடா-தம்பி
ஏழு கடல் அவள் வண்ணமடா
பாரதிதாசன்