பக்கம் எண் :

226ஆத்மாநாம் படைப்புகள்

இம்மூன்றும் எப்பொதும்
ஒன்றல்ல ஒன்றென்றால்
மூன்றான காலம் போல் ஒன்று
சி. மணி
42. பழகிப் போகும்
பஸ்ஸு க்குப் பாதையும்
பாதைக்குப்
பஸ்ஸு ம்
கலாப்ரியா
43. தன்னைத் தான் தேடிப்
புறப்படுமோர் யாத்திரைக்கு
அபி
44. வெட்டப்படுகிற
தொட்டி ஆடுகள்
முத்திரைகளைத் தாமே
குத்திக்கொள்வதில்லை
இன்குலாப்
45. பாதை நெடுகிலுமே
பூக்கள் குலுங்கிற்றாம்
ஆகாயப் புல்லினங்கள்
அனந்தப் பண்ணிசைத்து
அதிசயங்கள் செய்தனவாம்
நா. விச்வநாதன்
46. அவரவர் வானம்
அவரவர்க்கே யானாலும்
அடியாமல் பிடியாமல்
வசப்பட வழியில்லை
வண்ணநிலவன்
47. சராசரி இந்தியர்களின்
சகிப்புத் தன்மையால் மட்டுமே
தேசம்
தீப்பற்றி யெரியாமல் இருக்கிறது
விக்ரமாதித்யன்
48. இடையறாது ஓடும்
இந்தப் பேர் யாற்றின்
பெயர்தான் என்ன?
பிரதீபன்
49. யுகங்களுக்கப்பால்
காலத்துக்கப்பால்
எனது வேர்கள் ஆழச் செல்வன
மஹ்மூட் தர்வீஷ்
(பாலஸ்தீனம்)
50. என்ன நிகழ்ந்தது?
எனது நகரம் எரிக்கப்பட்டது,
எனது மக்கள் முகங்களை இழந்தனர்,
எனது நிலம், எனது காற்று
எல்லாவற்றிலும்
அந்நியப் பதிவு.
சேரன்
51. ஆளும் வர்க்கம் நடுங்குகிறது
சுடுமணலில் தவிக்கும் பூனையாய்த்
தடுமாறி அலைகிறது