பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்227

டெலிபோன்கள் புலம்புகின்றன
தீயணைக்கும் வண்டிகள் ஊளையிட்டுக்கொண்டு
குறுக்கும் நெடுக்குமாய் ஒடுகின்றன.
வால்கள் இயங்கிப் பிளிறுகின்றன
துதிக்கை உருவில் நீரை உமிழ்கின்றன
சுடர்கள் தணிந்தடங்கவில்லை.
சி. நாராயணரெட்டி
52. எங்கள் தேவை
துண்டுத் துணி அல்ல;
முழு ஆடை
பருக்கைகளல்ல;
முழுச்சாப்பாடு
ஒரு வேலை மட்டுமல்ல;
முழுத் தொழிற்சாலையும் எங்களுக்குத் தேவை
நிலக்கரி, தாதுப் பொருள்கள், உலோகக்கனி
அத்தனையும் எங்களுக்குத் தேவை.
எல்லாவற்றையும் விட மேலாக
நாட்டின் ஆளும் அதிகாரமும்
எங்களுக்குத் தேவை.
நல்லது
இவ்வளவும் எங்களுக்குத் தேவை.
ஆனால்
நீங்கள் கொடுப்பது என்ன?
பெர்டோல்ட் ப்ரெக்ட்
53. மகனே, குழந்தாய்
எப்படிச் சிரிப்பது என்று
எனக்குக் காட்டு.
ஒரு காலத்தில்
நான் உன்னைப் போல் இருந்தபோது
எப்படிச் சிரித்தேன் என்று
எனக்குக் காட்டு, மகனே.
கேபிரியல் ஓகாரா
(நைஜீரியா)
54. இயேசுவானவர்
ஒரு கருப்பனாகத் திரும்பி வருவாரானால்
அது நல்லதல்ல.
... ... ...
ஆனால்
இதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்-
இயேசுவே!
நீர்
நிச்சயமாக
மீண்டும்
சிலுவையில் அறையப்படுவீர்
லேங்ஸ்டன் ஹ்யூஸ்
55. என்னுடைய மக்களுடன் பேசிப்பார்க்கின்றேன்
என்னுடன் பேசி வந்ததாகச் சொல்லுகின்றார்கள்.
எஸ். வைத்தியநாதன்