பக்கம் எண் :

228ஆத்மாநாம் படைப்புகள்

இரண்டு சிகரங்களின் கீழ் -
ஒரு நேர்கோணம்

னந்த்-இன் சற்றே நீண்ட சிறுகதையுமல்லாத, நீண்ட கதையுமல்லாத, குறுநாவலுமல்லாத, நாவலுமல்லாத ஒரு படைப்பு தமிழில் வெளிவந்துள்ளது. நாவல் என்று குறிப்பிடப்பட்டு எந்தக் கதையும் கூறாமல் பளிச்சிடும் சில சிந்தனைத்தெறிப்புகளை உள் வாங்கிச் சாகசமாக ஒரு வாசகனை மயக்கமுற வைத்துள்ளது மேற்கண்டபடைப்பு. வசதிக்காகக் கதை என்று பின்வரும் வரிகளில் குறிப்பிடப்படும் ‘இரண்டு சிகரங்களின் கீழ்’ களம் பற்றி, உருவம் பற்றி, நாவல் உத்தி பற்றி மிகக் கவனத்துடன்ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதன் முன்னுரையில் ஞானக்கூத்தனால், அவரது எடைக்கோலில் இக்கதை மிக உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளது. பல்வேறு காரணங்களுடன்.

எதேச்சையாக ஒரு மலைப்பாங்கான சிற்றூர் ஒன்றில் பழைய நண்பர்கள் இருவர் சந்திக்கின்றனர். ஒருவன் வாழ்க்கையின் மேடு பள்ளங்களில் இடிபட்டு ஓரளவுவெற்றியும் பெற்று ஆயினும் ஒரு விதமான அதிருப்தியும் அடைந்தவனாக இருக்கிறான். இன்னொருவன் வாழ்க்கையின் பல படிகளையும் கடந்திருந்தாலும் அதன் எந்த ஒரு சிராய்ப்பும் இன்றித் தெளிவான சிந்தனையுடன் மதிநுட்பம் மிக்கவனாகவும், ஒருவரின் அகப்பிரச்சினைகளையும் ஈவிரக்கமற்ற கண்ணாடிபோல் எடுத்துக்காட்டும் திறன் வாய்ந்தவனாகவும் இருக்கிறான். இந்த இருவரும் பேசிப்பேசி முதலில் குறிப்பிடப்பட்டவன் ஏதோ ஒரு வகையில் வாழ்க்கையைப் பற்றிய சிந்தனைத் தெளிவு அடைந்து நகர்கிறான் மற்றவன் சுத்தசுயம்பு வாய் எதிரிலிருக்கும் மலைகளைப் பார்க்கின்றான்.

அவர்கள் சந்திப்பது, பேசுவது, கரைவது அமானுஷ்யமான இடம் போல் ஒன்றை விளக்குவது, காலம் கற்பூரம்போல் கரைவதாய்க் காட்டுவது அனைத்துமே ஏதோஒரு குறியீட்டுத்தன்மை வாய்ந்ததாய்க் குறிப்பிடப்படுவது எல்லாமே ஒரு மாயையை உருவாக்கமுயற்சித் திருப்பதுபோல் தோன்றுகிறது - தெரிந்தோ தெரியாமலோ.

இதில் வரும் இரண்டு நண்பர்களின் பெயர்கள் லோகு, ஜீவா. ஒருவனைலோக பந்தங்களில் கட்டப்பட்டவனாய்க் குறிக்கிறது. இன்னொருவனை என்றும் வாழும் ஜீவனைக் குறிப்பதாய்ச் சுட்டப்படுகிறது. தத்துவவாதி வழக்கம்போல் ஜீவனைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டு லோக பந்தங்களில் சிக்குண்டவனுக்குத் தாராளமாக உபதேசங்கள் செய்கின்றன.