நினைவு இருதயத்தின் நரம்புகளைத் துண்டு துண்டாக்கி எலும்புக் கூடுகளை ஒன்றாய் அடுக்கி சிதைக்குத் தீயிட்டுத் திரும்பினேன் திரும்பிப் பார்த்தேன் ஒரு புகைப்படம் கிழித்து எறிந்தேன் மிச்சம் உள்ள நினைவுகளையெல்லாம் கடலில் கரைத்துவிட்டேன் இனித் தெளிவென்று நினைத்து கட்டிலில் கவிழ்ந்தேன் நீ வந்தாய் எல்லாமே புதிதாகத் தெரிந்தது அங்கே நானுமில்லை நீயுமில்லை இரண்டு நிழல்கள் பேசிக்கொண்டிருக்கின்றன அவற்றின் மெல்லிய குரலின் கேஸட் பதிவே இது அந்த மொழிக்கு வார்த்தைகள் கிடையாது தாறுமாறான வாக்கியங்களின் ஒலிச்சிதறல் எண்ணிக்கையற்ற எழுத்துக்கள் மட்டும் எங்கிருந்தோ வந்துகொண்டேயிருக்கின்றன நிச்சயம் இது கனவு. சிச்சிப்படியா இங்கே கேஸட் நிறைவுறுகிறது பக்கத்து அறையில் செய்திகள் ஒலிக்கின்றன |